40 இல்லாமல் இருக்கலாம். ஆனால், தீவிரவாதிகள்; பாதுகாப்பு குறைவாக அமைச்சர்களைத்தான் தாக்க உள்ள நினைப்பார்கள். எனவே நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக பாதுகாப்பு அதிகாரிகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்கள். அதன் பின்னா தான் நான் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டேன். பாதுகாவலர்கள் அப்போது இருந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்க முடியாது. அன்று மாலை தான் நான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு போலீஸ்காரர்கள் வந்து நான் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.” தம்பி முரசொலி மாறன், நம்மை விட்டுப் பிரிந்தமைக்கு ஆரம்பக் காரணம் எது என்பதை - அவரது இந்த ஆதாரபூர்வமான வாக்குமூலமே அவரது மரண சாசனமாக அமைந்து நமக்கு நிரூபிக்கிறது. இங்கிலாந்து பிரதமரை இந்திய அரசின் சார்பாக அவரது இல்லத்தில் சந்திக்க 21.5.1997 அன்று இலண்டன் சென்றிருந்த முரசொலி மாறன் அங்கிருந்து எனக்கு எழுதிய கடிதத்தில் "10 டவுனிங் தெருவிற்குள் நுழையும்போது தன்னம்பிக்கைக்காக ஆத்தா! தாத்தா! என்று மனதிற்குள் முனகிக் கொண்டே நுழைந்தேன் ! (அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர்). இலண்டன் புறப்படுவதற்கு முன் திரு. குஜ்ராலைச் பிரதமரை) சந்தித்து இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரிடம் எப்படிப் பேசுவது, என்ன பேசுவது என்று
பக்கம்:மறக்க முடியுமா.pdf/51
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை