பக்கம்:மறக்க முடியுமா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 போவதில்லை. தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட அன்னையின் நிலைக்கு ஆளாகியுள்ளேன். மூன்று நான்கு வாரங்கள் நான் எழுதப் போகும் இத்தொடரினைத் தொடங்குவதற்கு முன்; கோவை சுப்பு என்கிற புகைப்பட நிபுணர் ' ஒருவர் அண்மையில் எனக்கு எழுதியுள்ள நீண்ட கடிதத்தின் சில பகுதிகளை எழுத்துப் பிசகாமல் இந்தச் சொல்லாரத்தில் கோத்துத் தருகிறேன். “டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, கோயமுத்தூரில் உள்ள சுப்பு என்கிற புகைப்படக்காரனின் அன்பு வணக்கம்! இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறதே புகைப் படங்கள்; நம் அருந்தவப் புதல்வர் மாறன் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள். அவற்றையெல்லாம் 'கிளிக்' செய்தது அடியேன்தான். உணர்ச்சிக் கொந்தளிப்பின் மிகுதியால் இக்கடிதத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அய்யா! இவை வெறும் புகைப்படம் அல்ல. அவருடன் இருந்த கணங்கள் மிகப் பெரும் மனித நேயப் பயணம். கடந்த 2000ஆம் வருடம். பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கை கோர்த்து நாட்டை ஆண்ட கால கட்டம் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் தி.மு. கழக ஆட்சி. தாங்கள் தான் முதலமைச்சர். ரொம்ப ரிலாக்ஸ்டாக கோவைக்கு தன் துணைவியார் திருமதி மல்லிகாவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறக்க_முடியுமா.pdf/8&oldid=1707615" இலிருந்து மீள்விக்கப்பட்டது