பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மறவர் சீமை

14. மற்றொரு முயற்சி

"கொக்கரக்கோ! கொக்கரக்கோ!"

காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருப்பதை சேவலின் கம்பீரமான கூவல் அறிவித்தது. அடுத்து சுப்பிரமணிய சாமி கோவில் சேகண்டி தொடர்ந்து ஒலிப்பது கேட்டது.

அதுவரை குரங்குடி சத்திரத்தில் முதல்நாள் இரவு வந்து தங்கின சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது தோழர்களும் உறக்கம் கலைந்து எழுந்தனர். கை, கால், முகம் சுத்தம் செய்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்துகொண்டு சத்திரத்திற்கு திரும்பி வந்தனர்.

குதிரைகள் பயணத்திற்கு ஆயத்தம்

செய்யப்பட்டன.

சித்திரங்குடி சேர்வைக்காரர் தனது தோழர்களில் இருவரைக் குறிப்பிட்டு,

"நீங்கள் இருவரும் உச்சி நேரத்திற்கு முன்னால் செவ்வல்பட்டி சென்று நாம் நேற்று சந்தித்த ராமசாமி நாயக்கரைப் போய்ப் பாருங்கள். அவர் நமக்காக ஊரில் வசூலித்த