பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**= =மறவர் சீமை

வேம்பாறு என்ற அந்தக் கிராமம் திருநெல்வேலிச் சீமையின் வடகோடியில் கிழக்குக் கடற்கரையில்அமைந்திருந்தது. சேதுபதி சீமையின் தெற்கு எல்லையில் அமைந்திருந்த வேம்பாறு என்ற சிற்றாறின் பெயரில் இந்தக் கிராமத்திற்கு அந்தப் பெயர் வந்துள்ளது. முன்னர், இந்தப் பகுதி முழுவதும் பாண்டியரது ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் பாண்டிய மன்னரது அரசர் அங்கமான வேப்ப மாலையை நினைவூட்டுவது இந்தப் பெயர்.

வேம்பாறு கிராமம் பரவர் என்ற மீனவர் இனத்தினரது சிற்றுாராக அப்பொழுது விளங்கியது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற பரதவர் என்ற பெயர் பிற்காலத்தில் பரவர் எனக் குறுகிவிட்டது. குறிப்பாக பரவர் என்ற இச்சொல் திருநெல்வேலிக் கடற்கரை மீனவ மக்களை மட்டும் இப்பொழுது குறிப்பதாக உள்ளது. ஏனெனில் தொண்டை மண்டலக் கடற்கரை மீனவர்கள் செம்படவர் என்றும், பன்னாட்டா என்றும், சோழ மண்டலக் கடற்கரை மீனவர்கள் பட்டினத்தார் என்றும், சேதுபதி சீமை மீனவர்கள் வலையர், முத்தரையர், கடையர் என்றும், பட்டம் கட்டி என இப்பொழுது வழங்கப்படுகின்றனர்.

கி.பி.16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காயல்பட்டினக்

கடற்கரைக்கு வந்த போர்த்துக் கீசியரும் அவர்களைத் தொடர்ந்து அடுத்த நூற்றாண்டில் இந்தக் கடற்கரைப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த டச்சுக்காரர்களும், இந்த மீனவர்களைக் கிருஸ்த்தவ சமயத்தை ஏற்குமாறு செய்ததுடன் இந்த மக்களது சமூக பொருளாதார நிலைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆதலால், இந்தக் கிராமம் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளும் பள்ளிக்கூடம், தேவாலயம் ஆகிய அமைப்புக்களுடன் விளங்கியது.

சேர்வைக்காரர் அந்த கிராமத்திற்குள் நுழைந்தபொழுது ஐசக்பிள்ளை கிராமத்தின் முகப்பில் அமைந்திருந்த தேவாலயத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். குதிரைகளும் கிராமத்திற்குள்