பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—93

மாவீரன் மயிலப்பன்- - -

நுழைந்ததை கவனித்த ஐசக்பிள்ளை மயிலப்பன் சேர்ாவைக்காரரை கண்டுகொண்டவராக, "ஐயா வாருங்கள்! வாருங்கள் என அழைத்தார். சேர்வைக்காரரும், வீரர்களும் குதிரையை விட்டு இறங்கி ஐசக்பிள்ளைக்கு வணக்கம் சொல்லினர்.

யாழ்பாணத்திலுள்ள டச்சுக்காரர்கள் இந்தியக்கரையிலிருந்து கைத்தறித்துணிகள், முத்து, சங்கு, தானியங்கள் உலர்ந்த மீன் (கருவாடு) ஆகிய பொருட்களைக் கொள்முதல் செய்து அனுப்புவதற்காக இரண்டு அலுவலர்களைத் தங்களது பிரதிநிதிகளாக அங்கு நியமித்து இருந்தனர். அவர்களது பணியின் நிமித்தமாக அவர்கள் ஆராய்ச்சி என அழைக்கப்பட்டனர். பொறுப்புள்ள அந்த அலுவலர்களில் ஒருவர்தான் இந்த ஐசக்பிள்ளை என்பவர். ஏற்கனவே கமுதிக்கோட்டைப் போர் சம்பந்தமாக சித்திரங்குடி சேர்வைக்காரர் இவரைப் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.

"ஐயா ஏது இந்த வெயில் நேரத்தில்" "எல்லாம் தங்களைக் சந்திப்பதற்காகத்தான்"மயிலப்பன் சொன்னார்.

"விபரமாக சொல்லுங்கள்" ஐசக்பிள்ளை கேட்டார். அதற்கு சேர்வைக்காரர் சொல்லிய பதில், "ஐயா எங்களுக்கு மிகவும் அவசரமாக கருமருந்து தேவைப்படுகிறது. எங்களுக்கு கிடைப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள். இதைச் சொல்வதற்காகத்தான், நானே நேரடியாக வந்துள்ளேன்” சுமார் இருநூறு சாக்குகள் தேவைப்படுகிறது. ஒரு வாரத்தில் இங்கு வந்து பெற்றுக் கொள்வதற்கு. உடனே ஏற்பாடு செய்யுங்கள். உரிய தொகையைத் தாங்கள் வேண்டும்பொழுது கொடுத்துவிடுவோம்" என்று சொல்லியவாறு, இடுப்பில் சொருகியிருந்த இரண்டு பணப்பைகளை எடுத்து ஐசக்பிள்ளையிடம் நீட்டியவாறு மீண்டும் சொன்னார்.

"இதில் ஐநூறு பொன் இருக்கின்றன. மீதத்தொகையை அடுத்தவாரம் கருமருந்து பெற்றுக்கொள்ள வரும்பொழுது