பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_95

மாவீரன் மயிலப்பன் - - -

சேர்வைக்காரர் மடத்திற்குள் நுழைந்தபொழுது, அங்கிருந்தவர்கள், எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்தனர்.

"சரி! எல்லோரும் அமருங்கள். நமது திட்டத்தைப் பற்றி விரிவாக பேசலாம்" மயிலப்பன் சொன்னார்.

இன்னும் ஒரு மாதகாலத்தில் கமுதிக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றுவது சம்பந்தமாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களிடம் விவரங்களைக் கோரினார். தாக்குதலில், அவர்களது கிராமத்தைச் சேர்ந்தவர்கள், எத்தனைபேர் கலந்து கொள்வார்கள் எத்தனை பேரிடம் நாட்டுத் துப்பாக்கிகள் இருக்கின்றன. கமுதிக்கோட்டைப் போருக்கு ஊர்மக்கள் எவ்வளவு பணம் கொடுக்க முடியும். அவர்கள் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கவதற்காக, எத்தனை கலம் அரிசி கொடுக்கமுடியும். போரில் காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்ய நாட்டுவைத்தியர் அல்லது குடிமகன் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பன போன்ற மிகவும் தேவையான விவரங்களை ஒவ்வொரு நாட்டுத் தலைவரிடம் இருந்தும் சேகரித்து ஏட்டில் பதிவு செய்து கொண்டார்.

இந்தக் கூட்டம் முடிவதற்கு நடு இரவு ஆகிவிட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மயிலப்பன் சேர்வைக்காரர் உற்சாகப்படுத்தியதுடன், இந்த முறை நாம் கமுதிக் கோட்டையைக் கைப்பற்றுவது உறுதி என்றும் அந்த போருக்குத் தேவையான கருமருந்து இலங்கையில் இருந்து பெறுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் பதினைந்து நாட்களில் கமுதிப் போருக்கான நாள் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொரு நாட்டுத்தலைவருக்கும் கிள்ளை இலை மூலம் தெரியப்படுத்தப்படும் என்ற விவரத்தையும் தெரிவித்தார்.

அதற்குபிறகு, அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.