பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= - =97

மக்களைத் திரட்டிக் கும்பெனியாரது நிர்வாகத்திற்குக் குந்தகம் ஏற்படுத்தி, அவர்களது சொத்துக்களை அழித்து இழப்புகளை ஏற்படுத்திவரும் சித்திரங்குடி சேர்வைக்காரர் மயிலப்பனுக்கும் அடைக்கலம் வழங்கி ஆதரவு அளித்து வருவதையும் தெளிவாகப் புரிந்து கொண்டனர் என்றாலும் இந்த மூன்று எதிரிகளையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது இயலாத செயல் பதையும் அறிந்து முதலில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கைப்பற்றும் பணியில் 6.2.1801ம் தேதி முதல் முனைந்து இருநதனர்., சேற்றில் புதைந்து விட்ட பாரவண்டி போல, அவர்களது ராணுவ வசதிகள் அனைத்தையும் அந்தப் போரில் ஈடுபடுத்தியும், வல்லமை மிக்க கும்பெனியாரது திறமையும், சூழ்ச்சியும் அதுவரை பலனளிக்கவில்லை.

இந்த நிலையில் சிவகெங்கைச் சீமையின் இறுதிப் போருக்கான ஆயத்தங்களைக் காளையார்கோவிலைச் சுற்றி சிவகெங்கைப் பிரதானிகள் செய்து வந்தனர். மறவர் சீமையில் இல்லாத, அரிதான கருமருந்தையும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் அண்மையில் உள்ள இலங்கையில் இருந்து பெற்று, சிவகெங்கைச் சீமைக்குள் எடுத்து வருவதற்கும், அவர்களது தொண்டித் துறைமுகத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இதற்கும் மேலதிகமாக இராமநாதபுரம் சீமையில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காட்டுத் தீயைப்போல கிளர்ந்து எழுந்துள்ள பன்னிராயிரம் மறவர்களது குறிக்கோளான கும்பெனியாரை அங்கிருந்து விரட்டி அடிக்கும் மக்கள் கிளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர்." மேலும், பாஞ்சாலங்குறிச்சிக்கும் காளையார்கோவிலுக்கும் இடைப்பட்ட தொலைவில் புறக்காவல் நிலையம் போல கமுதிக் கோட்டையும் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் கைப்பற்ற வேண்டிய தேவையையும் உணர்ந்து இருந்தனர்.

கமுதிப் பேட்டையிலிருந்த கும்பெனி விசுவாசிகளான வணிகர்களின் பொருட்களைக் கிளர்ச்சிக்காரர்கள் கொள்ளையிட்டனர். அடுத்து கோட்டையைத் தாக்கினர். ஆனால்,

63. குருகுகதாஸ்பிள்ளை திருநெல்வேலிச் சீமைச்சரித்திரம் பக் 263 64. Millitary Consultations vol. No.284/30.05.1801 pp 420-430 65. MDR vol. 1178(A) pp315-16