பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= =욕

செய்தியாக கமுதிக் கோட்டைக்குக் கிடைத்தது.

சில நொடிகள் சின்னமருது சேர்வைக்காரரது சிந்தனையில் குழப்பம். ஆனால், தெளிவான முடிவை உடனே மேற்கொண்டு போரினைத் தொடருமாறு மற்றவர்களுக்கு உத்திரவிட்ட பிறகு காளையார்கோவில் நோக்கிப் புறப்பட்டார். ஏனெனில், கும்பெனியார் பாஞ்சையிலிருந்து அடுத்து கமுதிக்கு வந்தாலும் அவர்கள் இறுதிப்போர் காளையார்கோவில் கோட்டைதானே. அதனால் அங்கு மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்களைக் கவனிப்பதற்கு சின்னமருது விரைந்து ன்ெறார்.'

ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் எதிர்பார்த்தபடி பாஞ்சாலங்குறிச்சிப்போரின் வெற்றி வீரர்களான பரங்கியர் கமுதிக் கோட்டைக்கு வரவில்லை. தளபதி அக்கினியூ மட்டும் ஒரு அணியுடன் பள்ளிமடம் வந்தான். கிழக்கே இராமநாதபுரம் சீமையுடனான செய்தித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்ததால் கமுதி வழியாக இராமநாதபுரம் செல்வதற்குப் பதில் திருச்சுழியல் வழியாகச் சென்றான். கிளர்ச்சிக்காரர்கள் பற்றிய பெரும் பீதி அங்கு நிலவியதால், கோயிலைச் சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி தற்காப்பு அரண் அமைக்குமாறு செய்துவிட்டுத் திருப்புவனம் சென்றான்.'கமுதிக் கோட்டை முற்றுகை தொடர்ந்தது. சித்திரங்குடி சேர்வைக்காரரும் அவரது தோழர்களும் கமுதி, முதுகளத்தூர் பகுதிகளில் கும்பெனியாரது சொத்துக்களுக்கு அழிமானம் ஏற்படுத்தியதுடன் ஆங்காங்கு உள்ள குடிமக்களையும் திரட்டி வந்தார்கள், என்பதைப் பள்ளிமடம், சிக்கல், இராமநாதபுரம் அமில்தாரர்களது அறிக்கைகள் புலப்படுத்துகின்றன.

கமுதியில் உள்ள கும்பெனியாரது கச்சேரி தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதுடன், கட்டிடத்திற்கு எரியூட்டப்பட்டது. கச்சேரிக்கு அண்மையில் நின்றுகொண்டு இருந்த இரு குழந்தைகளும் பரிதாபமாக தீயில் அகப்பட்டு இறந்தன.'

71. Madurai District Records vol. No 1133/26.01.1801 p.p 22-24

72. பள்ளிமடம் மிட்டாதார் அறிக்கை 25.06.1801. 73. MDR vo No 1182/30.06.1801 p212.