பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

- - =மறவர் சீமை

பகல்நேரத்தில் திரண்டு வந்தனர். அவரது சமிஞ்கை கிடைத்ததும் துப்பாக்கி குண்டுகள், சரசரவென ஆயுதங்களும், வெடிமருந்துகளும் ராணுவ உடைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு துளைத்துச் சென்றன.

சில நிமிடங்களில் செந்தீயின் நாக்குகள் முதுகளத்தூர் கச்சேரிக் கட்டிடம் முழுவதும் பரந்து பரவிச் சென்று பெரும் சேதத்தை விளைவித்தது. கச்சேரிக்குள் கடமையாற்றிக் கொண்டிருந்த சிப்பாய்களும், சேவகர்களும் பயந்து வெளியே தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்தனர். இந்தப் பேரழிவு நிகழ சித்திரங்குடி சேர்வைக்காருக்கு உதவும்கரமாக விளங்கியவர் முதுகளத்தூர் முத்து இருளப்ப சேர்வைக்காரர் என்ற பெருமகனார் எனத் தெரியவருகிறது. தொடர்ந்து இவரும் இவரது அணியினரும் ஏற்கனவே, சொத்துக்களைக் கொள்ளை கொண்டு, பேரிழப்பை ஏற்படுத்தி வந்தனர். இதனால், பீதியடைந்த நிர்வாகம் இராணுவ அணிகளை மேலும், மேலும் தொடர்ந்து அனுப்பி வைக்குமாறு அவலக்குரல் நிறைந்த அறிக்கைகளை அனுப்பி வந்தது,

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அன்று மாலையில் சித்திரங்குடி சேர்வைக்காரரும் அவரது அணியினரும் தெற்கே ஆப்பனூர் புறப்பட்டுச் சென்றனர். அன்று இரவு அங்கு நடந்த நாட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கும்பெனியாருக்கு எதிரான கிளர்ச்சியினைக் கூர்மைப்படுத்தி நிறைவு செய்ய அனைத்து நாட்டுத் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்ள மறவர் சீமையை ஆக்கிரமித்துள்ள பரங்கியரது ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் அவர்களை எதிர்த்துத் தாக்குதல் நடத்தவேண்டும் என்பது சித்திரங்குடி சேர்வைக்காரரது தூண்டுதலும் வற்புறுத்தலுமாக இருந்தது. அன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் மதுரை மன்னரது எழுபத்திரண்டு பாளையக்காரர்களைக் கொண்ட படை சிறைப்பிடிக்க முயன்றபோது, அவரது மைத்துனரும் போகலூர்க் கோட்டைத் தளபதியுமான வன்னியத்தேவர் தமது "நாடுகலக்கி" என்ற குதிரை

88. Military Consultations 1801.