பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O

- - மறவர் சீமை

சேதமும் தோல்வியும் ஏற்பட்டன. இப்பொழுது மூன்றாவது முறையாக கிளர்ச்சிக்காரர்கள் முழுமூச்சுடன் சிவகெங்கைச் சீமைப் பிரதானி வெள்ளை மருது இந்தத் தாக்குதலில் பங்குகொண்டது கிளர்ச்சிக்காரர்களுக்கு புதிய தெம்பை அளித்தது.

தாக்குதலின் போக்கு 21.7.1801ம் தேதி முதல் கடுமையாகியது. தலைமைப் பொறுப்பை மீனங்குடி முத்து கருப்பத்தேவரிடம் ஒப்படைத்துவிட்டு அவசரப் பணியாக வெள்ளை மருது சிவகெங்கை திரும்பினார். அங்கு நிலைகொண்டு இருந்த இராமநாதபுரம் கோட்டையைச் சார்ந்த மறவர்களையும், கிழக்கு இந்தியக் கும்பெனியின் மூன்றாவது ரெஜிமென்டின் முதல் அணியும் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். 19-8-1801ம் தேதியன்று கோட்டைத் தளபதி கொத்தளத்திற்கு வந்து நின்று கொண்டு வெள்ளைக் கொடியைக் காண்பித்துச் சமாதானம் கோரினான்.” கிளர்ச்சிக்காரர்களிடம் மகிழ்ச்சி கொப்பளித்தது. ஆனால், அவர்களிடம் ஒரு முகமான முடிவு ஏற்படவில்லை. முற்றுகை வெற்றிபெற்றது என்ற முடிவில், சிலர் தாக்குதலுக்குத் தலைமை வகித்த தலைவர்களது ஒப்புதல் இல்லாமல், தாக்குலிலிருந்து பின்வாங்கி பழமானேரி நோக்கிச் சென்றனர். அங்கிருந்து சென்று திருச்சுழியில் கோட்டையைக் கைப்பற்றினர்." இன்னும் சிலர் வெள்ளைத் தளபதியின் சமாதானக் கோரிக்கையைப் புறக்கணித்து அவர்களிடம் சரணடையுமாறு கூச்சலிட்டனர். நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. முற்றுகை தொடர்ந்தது.

ஏற்கனவே, இராமநாதபுரம் சென்றடைந்த ஒலை வாசகத்தின் அவசரத்தை உணர்ந்த இராமநாதபுரம் கலெக்டர் அங்கிருந்து அறுநூறு சுதேசி சிப்பாய்களைக் கமுதிக்கோட்டைக்கு விரைந்து செல்லுமாறு பணித்ததுடன் நாகலாபுரத்தில் இருந்து ஐநூறு எட்டப்பனது ஆட்களையும் நன்கு வெடிக்கும் திறன்கொண்ட இரண்டு பேய் வாய்ப்பீரங்கிகளையும் கமுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இரண்டே நாட்களில் தளபதி மக்காலே

92. Military Condsultations 1801 93. Military Condsultations vol 285 A pp 6850-57