பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

=மறவர் சீமை

காணிக்கையை, நமது உதிரமாக, உயிராக அளிக்க வேண்டிய வாய்ப்பு. மதுரைக் கோட்டையை முற்றுகையிட்ட ஆங்கிலப் பெரும் படையையும், ஆற்காட்டு நவாபின் படையையும் ஒன்றரை ஆண்டுகாலம் எதிர்த்து வீராவேசமாகப் போர் புரிந்து இறுதியில் காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நமது மண்ணைச் சேர்ந்த கான்சாகிபுவின் தியாகம், இதே காளையார்கோவில் போரில் வெள்ளையர் குண்டிற்குப் பலியான முத்துவடுகநாதத் தேவர் இன்னும் இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக தங்களது அரிய வாழ்வை, உயிரை அர்ப்பணித்த நூற்றுக்கணக்கான தியாகிகளது இலட்சியம் நிறைவேறும் நாள் இது.

"எதிரிகள் லஞ்ச லாவண்யங்களால் சேர்ந்துள்ள பெருங்கூட்டம். பெரும் அளவிலான ஆயுதங்கள். இந்த கெளரவப் படைகளுக்கு எதிரே பாண்டவர்களைப் போல இராமநாதபுரம் சிவகெங்கைச் சீமை நாட்டுப்பற்று மிக்க நீள் புகழ் மறவர்கள், எதிர் அமைத்து வருகின்றனர். இவர்களுக்கு நெல்லை, மதுரை, திண்டுக்கல் சீமை மக்கள், தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றனர்.

"நாங்கள் என்ன செய்ய வேண்டும். இந்தப்புதிய பாரதப் போரில் எங்களது பங்கு என்ன?

மயிலப்பன் சேர்வைக்காரர் இடைமறித்து வினவினார். போரில் எங்களது பங்கு என்ன?

"எங்களது அணியில் இணைந்து இதுவரை கடமையாற்றியது போல இனியும் இந்தப் போரிலும் உங்களை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு அர்ப்பணித்தல் வேண்டும். எங்களது கணக்குப்படி இங்கு நடக்கவிருக்கும் போருக்கு இங்குள்ள வீரர்களும் குடிமக்களும் போதுமானவர்கள். எங்களது அணிக்குப் பின்புலமாக நீங்களும்