பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

கிழக்கே கதிரவன் தனது முழுமையான வெண்கதிர்களை இன்னும் மேற்குப் பகுதியில் விரித்துப் பரப்பவில்லை. காளையார் கோவிலுக்கு நேர் தெற்கே உள்ள மறவர் மங்கலத்திற்கும் காளையார் கோவிலுக்கும் இடைப்பட்ட சுமார் ஒரு கல் தொலைவில் உள்ள பரந்த வெளியில் முதல் நாள் மாலையில் வந்து சேர்ந்த இராமநாதபுரம் சீமை மறவர்கள் ஆறுதலாக அமர்ந்து இருந்தனர்.

அவர்களிடையே, அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்த மயிலப்பன் சேர்வைக்காரர், அடிக்கடி காளையார் கோவில் திசையைக் கூர்ந்து நோக்கியவாறு காணப்பட்டார். சிறிது நேரத்தில் பீரங்கிகள் வெடிக்கும் சத்தம் போரிடும் வீரர்களது ஆரவாரம் ஆகியவை மென்மையாகக் கேட்கத் தொடங்கியது.

மயிலப்பன் சேர்வைக்காரர் தனது தோழர்களை ஆயத்தமாக இருக்குமாறு அழைப்பு விடுத்தார்.

தரையில் அமர்ந்து ஆறுதலாக இருந்த வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று போருக்குப் புறப்படும் வகையில் தங்களது உடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு அவர்களது ஆயுதங்களுடன் தயாராக நிற்கத்