பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறவர் சீமை

கொள்வோம். அங்கே கோட்டையை நெருங்கியவுடன் நாம் இரு பிரிவாகச் சென்று கோட்டையின் வாசல் பகுதியில் நேரடியாக பரங்கிகளை பொருதி அழிப்போம்..... இப்பொழுது நாம் காளையார்கோவில் கோபுரத்தில் சிவப்பாக கொடி பறக்க விடப்படுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து இருப்போம்!

மயிலப்பன் சேர்வைக்காரரும் அவரது போர் மறவர்களுடைய பார்வை வடக்கே நோக்கியவாறு இருந்தது.

நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது. காளையார்கோவில் பகுதியில் பீரங்கிகள் வெடிக்கும் ஒலி பலமாகவும், தெளிவாகவும் கேட்டது. போரின் ஆரவாரம் அதிகரிப்பதும் கேட்டது. ஆனால் கோயில் கோபுரத்தில் சிவப்புக் கொடி ஏற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

மயிலப்பனும் அவரது நண்பர்களும் வடக்கே பார்த்துப் பார்த்து கண்கள் பூத்து விட்டன.

ஏறத்தாழ வானின் உச்சியை நோக்கிச் சூரியன் உயர்ந்து சென்று கொண்டிருந்தான்.

போரின் நிலை என்ன? மயிலப்பன் சேர்வைக்காருக்கு ஒரே குழப்பம். என்ன செய்யலாம்? ஒரு வீரனைக் குதிரையில் சென்று காளையார்கோவிலுக்குக் கிழக்கேயுள்ள குடியிருப்பு வரை சென்று பார்த்து செய்திகளை அறிந்து வருமாறு அனுப்பி வைத்தார். அடுத்த ஒரு நாழிகை நேரத்தில் அந்த குதிரை வீரன் மயிலப்பன் சேர்வைக்காரரிடம் திரும்பி வந்தான். அவன் தெரிவித்த செய்தி மயிலப்பன் சேர்வைக்காரரது சிந்தனையை நிலைகுலையச் செய்தது. என்றாலும், இனியும் வீணாக மறவமங்கலத்தில் தாமதிப்பது அவசியமற்றதுடன் ஆபத்தானது கூட என்பதை அவரது உள்ளுணர்வு தெரிவித்தது.