பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறவர் சீமை

19. குழம்பிய நிலையில் மயிலப்பன்

அன்று நடந்த காளையார்கோவில் கோட்டைப்போர் தென்னிந்திய விடுதலை இயக்கத்திற்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது. முதல்நாள் இரவே சோழபுரத்திலும் ஒக்கூரிலிருந்தும் புறப்பட்ட கர்னல் அக்கினியூ தலைமையிலான பரங்கிப் படைகளைப் பெரிய மருது சேர்வைக்காரரும், சின்னமருது சேர்வைக்காரரும் முறையே கொல்லங்குடி அருகிலும், முத்துளர் அருகிலும் புற்றீசல்கள் போல் அடுத்தடுத்து வந்த பரங்கி அணிகள் சிவகெங்கைச் சீமை கிளர்ச்சியாளர்களைத் திக்குமுக்காடிச் செய்தது என்றாலும், மனந்தளராத கிளர்ச்சிக்காரர்கள் அந்த நடு இரவு கும்மிருட்டில் பத்திரமாகப் பின்வாங்கி காளையார்கோவில் கோட்டையின் தென்பகுதிக்கு விரைந்து வந்து தற்காப்பு அணிகளுடன் சேர்ந்து கொண்டனர். நிச்சயமாகப் பரங்கிகளது கணக்கை அன்று காலையில் தீர்த்துவிடலாம் என்ற திடநம்பிக்கையில்.

ஆனால், மனித சிந்தனைகளுக்கு இயைந்தவாறு மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறுவது இல்லை. நினைப்பதெல்லாம் அப்படியே நடந்துவிட்டால் வாழ்க்கை