பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - மறவர் சீமை

செலுத்தியவர்களாக அதே மண்ணில் சாய்ந்து மடிந்தனர். மேலும், வீணாக உயிரிழப்பைத் தவிர்க்கும் வகையில் போரினைத் தலைமை தாங்கிய மருது சேர்வைக்காரர்களும், அவர்களது நண்பர்களும் மேற்குப்புறமாகப் பின்வாங்கி பின்னே வடக்கே உள்ள அரண்மனை சிறுவயல் காட்டிற்குள் நுழைந்துவிட்டனர். இவர்களிடம் எவ்விதம் எங்கு தொடர்பு கொள்வது? சிவகெங்கைச் சீமையின் வீரவரலாறு நாட்டுணர்வு கொண்ட இந்த நல்லவர்களது தியாகத்தினால் புதுப்பிக்கப்பட்டு விட்டது!

சங்ககாலத்திற்குப் பின்னர், கானப்பேர்எயில் என்ற காளையார்கோவில் வரலாற்றுப் புகழையும் பெருமையையும், மீண்டும் பெற்றது. ஆனால், அப்பொழுது முதல் போற்றிக்காக்கப்பட்ட மறவர்களது பிறந்த மண்ணின் மீதான சுதந்திரம் அவனியில் யாருக்கும் அஞ்சாது, இரும்பு நெஞ்சத்துடன் ஏறு நடையுடன் திகழ்ந்த சுயேச்சையான வாழ்க்கை எல்லாமே அழிந்துவிட்டதே!

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்விவிட்டது. ஆனால் தருமம் மறுபடியும் வெற்றி பெறத்தான் செய்யும். வெற்றி கிட்டுமா எப்பொழுது?

பலமுறை வெற்றியின் நிழல்கள் படிந்தபொழுது அது அந்திநேர வெய்யில் மறைந்தது போலல்லவா விரைவில் மறைந்து விட்டது. மீண்டும் அதனைப் பெற முடியுமா?

மறவர் மங்கலத்திலிருந்து திரும்பிய மயிலப்பன் சேர்வைக்காரர் சூடியூர் சத்திரத்திற்கு வந்து சேர்ந்து மூன்று நாட்களாகி விட்டன. தன்னந்தனியாகச் சத்திரத்தில் பின்புற அறையில் தனிமையாக அடைபட்டுக் கிடந்தார். மரண காயமுற்ற வேங்கைப் புலிபோல அன்ன ஆகாரம் இல்லாமல் படுத்து இருந்தது அவரது உடல்தான். இயக்க எதுவும் இல்லை. ஆனால், அவரது சிந்தனைகள், எல்லையற்ற வானக்கடலில் அலைந்து மிதந்து