பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 மாவீரன் மயிலப்பன் -

நாடகத்தைத் தயாரித்து வந்தனர். மக்களைத் திரட்டி, அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மக்களது தலைவர் என மக்கள் நம்பி வருவதைப் பொய்யாக்கி, அவர் ஒரு குற்றவாளி, சமூகத்துரோகி என்று பெயர் சூட்டுவதற்குப் படாத பாடுபட்டனர். இராமநாதபுரம் சீமை கலெக்டராக இருந்த லூவிங்டன், ராஜ ரிஷியான விஷ்வாமித்திரருக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு நின்ற வசிஸ்டரைப் போன்று கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் அழுக்குகளைத் தின்று உயிர்வாழும் குளத்து மீன்களைப் போல கும்பெனியாரது சில்லரை உதவிகளைக் கொண்டு ஜிவித்துவரும் சில அடிவருடிகளைச் சாட்சிகளாகச் சேர்த்து சித்திரங்குடி சேர்வைக்காரருக்கு எதிராக வழக்குக் தொடுத்து தண்டனை பெற்றுக் கொடுக்க பெருமுயற்சி செய்துவந்தார். இந்தச் சீமையின் சமயச் சிறுபான்மையினரான, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கலெக்டரது திட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். அவரது உத்திரவைத் தலையில் ஏற்றுத் தோப்புக்கரணம் போடும் பத்தொன்பது நபர்களைக் கண்டுபிடித்து, அவர்களது பெயர்களை இணைத்து குற்றப்பத்திரிக்கையைக் கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த விசாரணையை நடத்தி வழக்கில் தீர்ப்புக் கூறுவதற்காக நடுவர் குழு ஒன்றை நியமிக்க கவர்னர் உத்தரவிட்டார். அந்த நடுவர்கள் யார் தெரியுமா? ஆங்கிலேயரது குற்றவியல் சட்டம் பயின்றவர்களா? அல்ல அந்தக் கால கட்டத்தில் ஆங்கில குற்றவியல் நடைமுறைகளும் இந்திய தண்டனைச் சட்டமும் அமுலுக்குக் கொண்டு வரப்படாத காலம்! ஆதலால் முதுகளத்துர் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்ட ராணுவத் தளபதிகள் அந்தக் கிளர்ச்சியின் மாபெரும் வீரன் மயிலப்பன் சேர்வைக்காரரை விசாரித்து "நீதிவழங்கும் நீதிவான்களாக நியமிக்கப்பட்டனர். பாளையங்கோட்டை குதிரைப்படை அணியின் தலைவர் ‘மேஜர்’ பர்ரோஸ், இந்த நடுவர் மன்றத்தின் தலைவர் இவருக்கு உதவ இரு உறுப்பினர்கள் இந்த மன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டனர். பாளைங்கோட்டை பட்டாளத்தின் மூன்றாவது அணித்தலைவர்