பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறவர் சீமை

லெப்டினன்ட் கோவலஸிம், முதலாவது அணியின் தளபதி கேப்டன் ஒஹாடிராட்டரும் இந்தக் குழுவில் இரு உறுப்பினர்கள். அதாவது குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியை விசாரித்துத் தண்டனை வழங்குபவரும் கும்பெனி அரசின் அலுவலர்கள், அவர்களுக்கு எதிராக எவ்விதம் தீர்ப்புச் சொல்லுவார்கள்?

இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் குற்றப்பத்திரிக்கையைத் தயாரித்த கலெக்டர் லூசிங்கிடனே அந்த நடுவர் குழு இப்படித்தான் தண்டனை வழங்க வேண்டுமென்று குழுவிற்கு தனியாகப் பரிந்துரை அனுப்பியது ஆகும். அந்தக் கடிதத்தில் மனித சமுதாயத்தின் இலட்சியங்களை எய்துவதற்கு போராடிய தியாகிகளைக் காலமெல்லாம் சுட்டிக்காண்பிக்க வரலாறு தவறுவதில்லை. அதனால் நமது முன்னோர்கள் இந்த நாட்டின் நலனுக்காக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எவ்வித தியாகங்களை அவர்களது கண்ணி காணிக்கைகளாகச் சமர்ப்பித்தனர் என்பது வரலாற்றில் பதிவு பெற்றுள்ளது. அதே சமயம் இந்தப் புனித வேள்விக்கு இடையூறாக இருந்த மனிதப்பதர்களின் பெயர்களும் அந்தப் பொன்னேட்டில் கருமை நிறப் பக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில்தான் சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது மகத்தான வாழ்க்கையைத் தியாகத்தைச் சிறுமைப்படுத்துவதற்காக பயன்பட்டு பொய்சாட்சியம் சொல்லிய புல்லர்களை நாமும் தெரிந்துகொள்வோம்.