பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறவர் சீமை

விடும்படியும், அவர்களுக்கு வேண்டும்பொழுது சிறிது பணம் கொடுப்பதாகவும் சொன்னார். இவர் அவரிடம் 500 சக்கரம் கேட்டதற்கு அப்பொழுதே 100 சக்கரம் அவரிடம் கொடுத்ததாகவும், அவருடன் இருந்த பிராமணர்க்கு 10 பக்கோடா பணமும் சேவகர்களுக்கு 40 சக்கரமும் கொடுத்ததாகவும் சொன்னார். அவர்கள் அவரின் விடுதலைக்கு சிபாரிசு செய்வதற்காக.

அடுத்த சாட்சியாக கமுதியைச் சேர்ந்த அர்த்த தேவர் சேர்வைக்காரர் சாட்சியம் சொன்னார். அபிராமம் அருகில் உள்ள கொண்டிசேரியில் மார்ச்சு மாதம் 1801ம் வருடம் தங்கி இருந்தபொழுது மயிலப்பனது ஆட்கள் வந்து அவர்களில் எட்டு சேவர்கள் என்னைப் பிடித்து தூக்கி மயிலப்பன் சேர்வைக்காரர் முன்கொண்டு போய் நிறுத்தினர். அவர் என்னை அபிராமத்திற்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டார். அபிராமத்தில் என்னைக் கிளர்ச்சியில் சேர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். நான் இனங்காததால் என்னை விடுவித்துவிடுமாறு சொன்னதுடன் இன்னும் இரு நாட்களில் எனது ஆட்களுடன் வந்து சேர்ந்து கொள்ளாவிட்டால் எங்களைக் கொன்றுவிடுவதாகவும், எங்களது கிராமத்தைத் தீ வைத்து கொளுத்தி விடுவதாகவும் பயமுறுத்தியதைத் தெரிவித்தார்.

குறுக்கு விசாரணையின் பொழுது கி.பி.1801 மார்ச்சு மாதம் மயிலப்பன் கமுதிக்கு வந்து இருப்பது தெரிந்து நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் வீட்டில் இருந்தோம். குதிரையில் வந்த மயிலப்பன் உடன் வந்த ஐம்பது பேர் எனது வீட்டைத் தாக்கினர். இருபது பேர் என்னை அடித்தனர். பெண்டுகளையும், குழந்தைகளையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். பிறகு மயிலப்பன் பேட்டைக்குச் சென்றவுடன் என்னையும் அங்கு அழைத்துச் சென்றனர். பேட்டை கொள்ளையிடப்பட்டது. அங்கு பணியில் இருந்த சேவகர்கள் ஓடி விட்டனர். அந்த நேரத்தில் நானும் தப்பி வந்து விட்டேன்.