பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் ==

=*

அனுப்பியதாகவும், அவரும் இன்னொரு அம்பலக்காார் பெரியய்யா தேவரும் உடனே அங்கு சென்றதாகவும் சொன்னாா அப்பொழுது கிடைத்த செய்தி, மயிலப்பனும் இன்னும் நூற்று.ஐம்பது பேர்களும் முதுகளத்தூர் சென்று இருப்பதாகவும், அவர்கள் சில அம்பலகாரர்களைப் பிடித்து நானூறு அல்லது இருநூறு சக்கரம் பணம் கொடுக்கும்படி சொன்னதுடன் ஏராளமான அளவு அரிசியைப் பறித்துக் கொண்டு போய்விட்டதாக. இதற்குப் பிறகு அவர்கள் முதுகளத்துருக்குச் சென்றபொழுது கிளர்ச்சிக்காரர்கள் கமுதிக்குச் சென்றுவிட்டனர். நாலைந்து நாட்களுக்குப் பிறகு சிவகெங்கை சேர்க்ைகாரரது மருமகன் பெரிய கருப்பத் தேவர் மற்றும் இரண்டு, மூன்று நாட்டுத்தலைவர்களும் ஐந்நூறு பேர்களும் அவரது கிராமத்திற்கு வந்து மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்தனர். பிறகு மயிலப்பனும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். மயிலப்பன் அங்கு வருவதற்கு முன்னால், பிற தலைவர்கள் எங்களது வீடுகளை இடித்துத் தள்ளும்படி உத்திரவிட்டனர். ஆனால், மயிலப்பன் வந்து அவர்களது போக்கை நிறுத்தியதுடன் அமில்தாரரையும் உழைக்கும் திறன் கொண்டவர்களையும் அழைத்து வருமாறும் 100 சக்கரம் பணம் எடுத்து வருமாறும் ஆணையிட்டார்.

அவர்கள் 100 சக்கரம் பணம் வசூலித்து முகையதீன் மூலம் சாட்சியிடம் கொடுத்தனர். ஏழு எட்டு நாட்களுக்குப் பிறகு, இராமநாதபுரம் பட்டத்திற்கு உரியவராகச் சொல்லிக் கொள்பவர் இருநூறு ஆட்களுடன் அங்கு வந்தார். சிவகெங்கை ராஜா, அங்குள்ள வெள்ளாளர் அனைவரையும் கொன்றுவிட உத்திரவிட்டுள்ளார் என்று சொன்னார். ஒருவர் கொல்லப்பட்டார் எஞ்சியிருந்தவர் பீதியினால் நடுங்கிக் கொண்டிருந்தனர். சாட்சி அவர்களிடம் சரணடைந்து விடுவது நல்லது என எண்ணியவாறு வந்தபொழுது சுப்பிரமணிய பிள்ளையினால் பிடிக்கப்பட்டு மயிலப்பனிடம் ஒப்படைக்கப்பட்டார். பெரிய மருதுவிற்கு துணையாகச் செல்லும்படியாக, அதன்படி காடல்குடி கிராமத்திற்கு இருந்த பெரிய மருது முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.