பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=மறவர் சீமை

கும்பெனியார்கள் பல ஊர்களில் தங்களுக்குச் சொந்தமான தானியக் கிடங்குகள் கொள்ளையிடப்பட்டு அவரைச் சேர்ந்தவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வந்த நேரம்.

1801 ஏப்ரல் மாதக் கடைசி அல்லது மே மாதத் தொடக்கத்தில், முன்னுறு ஆட்களுடன் வந்து அபிராமம் கச்சேரியைத் தாக்கினர். சாட்சியும் மற்றும் ஊர் மக்களும் பயந்து ஊரைவிட்டு ஓடினோம். குதிரையில் துரத்தி வந்த மயிலப்பன், ஆறாயிரம் பிள்ளையையும், காதர் மீரான் அம்பலக்காரரையும பிடித்துச் சென்றார். சில நிமிடங்களில் ஆர்த்திதேவனும் பிடித்து வரப்பெற்று மயிலப்பன் முன் நிறுத்தப்பட்டார். இந்த மூன்று பேரும் தன்னந்தனியாக நிறுத்தப்படடனர். அப்பொழுது சேவகர்கள் கிராமத்தைக் கொள்ளையிட்டு அவர்களது படிப்பணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அடுத்து ஆர்த்த தேவர் விடுதலை செய்யப்பட்டார். ஆறாயிரம்பிள்ளை குடும்பப் பெண்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் விடுதலை செய்யப்பட்டார்.

அன்று மாலை மயிலப்பனைக் கிராமத்தில் விட்டு விட்டு மற்றவர்கள் மட்டும் சென்றனர். தான் செல்லும் இடத்திற்கு காதா மீரானைக் கொண்டுவரும்படி உத்திரவு பிறப்பித்துவிட்டு, ஆனால் அவர் கொண்டு செல்லப்படும் வழியில் காதர்மீரான் சேர்வைக்காரர் கேட்டுக் கொண்டபடி அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்பொழுது அவர் கொடுத்த வாக்குறுதிப்படி அடுத்தநாள் காலையில் 500 சக்கரம் பணம் வசூலித்துக் கொடுத்தார். கூடுதலாகப் பணம் கொண்டு வராததற்காக உதை விழுந்தது. இரவில் மயிலப்பன் அங்கு வந்தார். நீங்கள் வாக்களித்தபடி பதினைந்து நாட்களாகத் தொகையைக் கொடுக்கவில்லை. அதனால் உங்கள் ஊருக்குத் தீயிடப் போகிறேன் என்று பயமுறுத்திய சிறிது நேரத்தில் கச்சேரிக்கு நெருப்பு வைக்கப்பட்டது. தீயில் நான்கு குழந்தைகள் கருகிச் செத்தன. வயது வந்தவர்கள் சிரமப்பட்டுத் தப்பினர்.