பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

மாவீரன் மயிலப்பன்- -

வெள்ளைத்தளபதி ஒருவர் சித்திரங்குடி சேர்வைக்காரரிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"இதுவரை நீர் சொல்லிய விவரங்களில் இருந்து நீர் கடமைப்பற்றும், பொறுப்பும் உள்ள பிரஜையாக இல்லாமல் எவ்வித சொந்த பாதிப்பும் இல்லாத வகையில் எப்பொழுதும் மக்களைத் தூண்டிவிட்டு கும்பெனி அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் முனைந்து நின்று மக்களிடம் அலுவலர்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்து வந்துள்ளீர். இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா?

சித்திரங்குடி சேர்வைக்காரர் சிறை வாழ்க்கையின் காரணமாக மிகுந்த பலவீனமுற்று இருந்தார். அடுத்து தமது கடந்தகால நிகழ்ச்சிகளை, நினைவுபடுத்தி வாக்குமூலம் வழங்கும்போது, அவரது உள்ளம் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய நினைவினால் மேலும் பாதிக்கப்பட்டு மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார் என்றாலும் சில வினாடிகளில் தமது சோர்வு, களைப்பு ஆகியவைகளைப் புறக்கணித்த மீண்டும் புதிய தெம்புடன் பதில் அளித்தார்.

"நான் செல்வாக்குள்ள பாளையக்காரர்கள் அல்ல. மக்களது புரட்சிக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி எனக்கு இல்லை. நான் ஒரு விவசாயிதான். தன்னுடைய தலைவரது கட்டளைக்குப் பணிந்து செயல்படுவது ஒரு போர் வீரனது கடமையாதலால் தாம் அந்தச் சூழ்நிலையில் செயல்பட்டதாகவும், கடமையை நிறைவேற்றியதற்குத் தண்டனை என்றால் அது தனது விதிவசம் என்று ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்."

மேலும், மயிலப்பன் சேர்வைக்காரரது வாக்குமூலத்தை

கேட்பதற்கு பொறுமை இல்லாத கும்பெனி நடுவர் ஒருவர், அவரை இடைமறித்து கேள்வியொன்றைக் கேட்டார்.

104 A. Military Consultations Vol.299 (14-06-1802)P.P.4425-26