பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

மாவீரன் மயிலப்பன்=

2.புரட்சிப் பொறி

வைகைறைப் பொழுது:

கிழக்கு வானில் வண்ணக்கலவையினுடே பகலவனது ஒளிப் பாய்ச்சல் பிரகாசம் பெறவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இன்னும் நிலம் தெளியவில்லை.

சேதுபதிச் சீமையின் உட்பகுதியான ஆப்பனூர் நாட்டு முதுகளத்துர் அப்பொழுதுதான் விழித்தது.

வேப்ப மரங்களிலும், உசிலை மரங்களிலும் தொகுதி, தொகுதியாக அமர்ந்து இருந்த கரிச்சான் என்ற வால் நீண்ட களிக்குருவிகள், சாம்பல் நிறச் சிட்டுக்கள், கரு நிற காக்கைகள் அனைத்தும் உறக்கம களைந்து ஒரே சுதியில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த இரைச்சல் மட்டும் தெளிவாக ஒலித்துக் கொண்டு இருந்தது. புலரும் காலைப் பொழுதிற்கு பூபாளம்பாடி வரவேற்பது போல்.

வடக்கூர் குடியிருப்பில் இருந்து மக்கள் ஒன்றிரண்டு, நான்கு ஐந்து பேர்களாக தெற்கே சுப்பிரமணியசாமி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள கச்சேரித் திடல் நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.

இப்பொழுது நன்கு விடிந்துவிட்டது.