பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՔC)Յ மாவீரன் மயிலப்பன்= -

கொன்றனர்.

இன்னும் சேது நாட்டின் வடபகுதியான சிவகங்கைச் சீமை பிரதானிகளான மருதுபாண்டிய மாவீரர்களை, காளையார்கோவில் கோட்டைப் போரில் தோற்கடித்ததுடன் அவர்களை கைது செய்து 24.10.1807ல் திருப்பத்துார் கோட்டையில் தூக்கில் தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தனர். இந்த மகத்தான வீரர்களின் தியாகம் தொடர்ந்து வந்துள்ளது.

மறவர் சீமையின் மானங்காக்கப் புறப்பட்ட மக்களது இதயத்தில் இலங்கிய ராஜவிசுவாசத்தை - இணையற்ற போராயுதமாகக் கொண்டு கி.பி.1795க்கும் கி.பி.1802க்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகள் அல்லும் பகலும் கும்பெனியாரை சேது நாட்டின் புனித மண்ணில் இருந்து, கழனியில் இருந்து பறித்து எறியப்படும் களையைப் போல் துக்கி எறிவதற்குப் பாடுபட்ட சேது நாட்டுச் சிங்கம் சித்திரங்குடி மயிலப்பனுக்கும் முடிவு வந்துற்றது.

சேதுபதி சீமையின் புதிய ஆளவந்தார்களான அந்நியர்கள் இப்பொழுது ஆறுதலாகப் பெரு மூச்சு விட்டிருப்பார்கள். இனிமேல் அவர்களை அவர்களது சொத்துக்களை அழிப்பதற்கு வேறு யாரும் இருக்கமாட்டார்கள் எனத் திண்னமாக நம்பி இருப்பார்கள். இந்த நம்பிக்கை சுக்கு நூறாகச் சிதறடிக்கப்படும் என்பதை வரலாறு விரைவில் உணர்த்தும் என்பதும் உறுதி.

வாரணம் பொருத மார்பும், வரையெடுத்த தோளும், வாய்க்கப் பெற்ற இதிகாச புகழ் இராவணன் என்ன ஆனான். அவனது வழியில் தானே கம்சனும் இரணியனும் அழிந்து போனார்கள். சர்வ வல்லமையுள்ளவர்களாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஆங்கிலக் கும்பெனியாரும் ஒரு நாள் அழிக்கப்படுவார்கள். அக்கிரமங்கள், அட்டுழியங்கள், அடக்குமுறைகள், மூலமாக இந்த நாட்டு பண்பாடு நாகரிகம், மரபு வழியிலான கைத்தொழில்கள்