பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

2O5

25. நிறைவு வரிகள்

அண்டம் குலுங்க சண்டைமாருதம் என வெடித்த முதுகளத்துர் சீமை மக்கள் புரட்சி - இந்திய விடுதலை இயக்கத்திற்கே முன்னோடியாக வாய்த்த மக்கள் இயக்கம் - சிவகெங்கைச் சீமை காளையார்கோவில் கோட்டைப் போரின் பின்னடைவால் பாதிக்கப்பட்டு சிற்றெறும்பு விட்ட பெருமூச்சாய் சிதைந்து விட்டது.

மறவர் சீமையின் மக்கள் தலைவர்களான கமுதி சிங்கன் செட்டி, பொட்டுர் மீனங்குடி கனகசபாபதி தேவர், ராஜசிங்கமங்கலம் ஜகந்நாத ஐயன், குமாரத்தேவன், திருக்கண்ணத் தேவன் ஆகியோரது உடமைகளைப் பறித்து உயிர்களைக் குடித்த கும்பெனி ஒநாய்கள் இறுதியாக, சித்திரங்குடி சேர்வைக்காரர் என பாசத்துடன் அழைத்து வந்த மக்கள் தலைவனது உயிரையும் மாய்த்து, மறவர் சீமை விடுதலை இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முந்தைய ஆண்டில் கும்பெனியாருடன் வீராவேசமாக மோதிய மீனங்குடி கனகசபாபதி தேவர் என்ற வீர இளைஞனைக் கொல்வதற்காக அபிராமத்தில்