பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ձ ՕՅ

- - =மறவர் சீமை

நாட்டப்பெற்றுள்ள தூக்கு மரத்தில் மாபெரும் வீரத்தளபதி சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் என்று அழைக்கப்பட்ட பெரிய வெள்ளையத் தேவரையும் 06.08.1802ல்" துக்கிலிட்டதுடன் மறவர் சீமையின் சுதந்திர மூச்சு நின்று விட்டது.

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளையருக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாபெரும் முதல் தளபதி சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் என்பதை நாடும், ஏடும் உணரச் செய்ய வேண்டியது நமது கடமை.

106. Military Consultation's vol 299B p 4557.