பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - மறவர் சீமை

5. மக்களை எதிர்த்து

ம து ைர க் கு ம் பாளையங்கோட்டைக்கும் கலெக்டரது அபயம் கோரிய கடிதங்களை அவசர துதவர்கள் பெற்று எடுத்து விரைந்தனர். பாளையங்கோட்டையிலும் மதுரையிலும் உள்ள கும்பெனியாரது தளபதிகள் கும்பெனிப் பட்டாளங்களை முதுகளத்தூர் பகுதிக்கு அனுப்பி வைக்க இசைந்தனர். இதற்கிடையில் இராமநாதபுரம் கோட்டைத் தளபதி மார்டின்ஸ் தலைமையில் ፍ® ® பட்டாளமும் முதுகுளத்துார் சென்றது. இந்தத் தளபதி பொறுப்பில் இருந்து வந்தவர், சேதுபதி சீமையின் மூலை முடுக்கு மட்டுமல்லாமல், இந்தச் சீமை மக்களது பலதிறப்பட்ட மனோபாவங்களையும் பழக்க வழக்கங்கள்ையும் நன்கு அறிந்தவர். இதற்கெல்லாம் மேலாகச் சுறுசுறுப்பாகவும் தந்திரமாகவும் செயல்படுபவர். இவரது அணியினரைக் கிளர்ச்சிக்காரர்கள் கடம்போடை என்ற இடத்தில் மறைவில் இருந்து தாக்கி பின்

வாங்குமாறு செய்தனர். இந்தத் தாக்குதலில் ஐந்து பரங்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையறிந்த

கலெக்டர் லூவிங்டன், மற்றொரு அணியை தளபதி கிரிம்ஸ் தலைமையில்