பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_51

மாவீரன் மயிலப்பன் =

இந்தச் செய்திகள் அனைத்தையும் அறியும்பொழுது தமது மறவர் சீமை மக்கள் மட்டுமல்ல. தென்னகம் முழுவதும் பரங்கிகளுக்கு எதிராகக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விட்டார்களே என்று வியப்பும், களிப்பும் அடைந்தார் சித்திரங்குடி சேர்வைக்காரர். ஆம், மக்களது அவலங்களை உணராத மக்களிடத்தில் அனுதாபமும் அன்பு சிறிதும் கொள்ளாத புதிய ஆளவந்தார்களான வெள்ளைப் பரங்கிகளின் கருணை இல்லாத ஆட்சி கடுகி ஒழிந்திடுதல் இயல்புதான்.

இத்தகைய அரசியல் நிகழ்வுகளை இப்பொழுது இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து வருகிற சிவகெங்கைப் பிரதானிகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்வரை மறவர் சீமை மக்களது ஆவேசமான நாடு தழுவிய இயக்கத்தைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வர முடியாமல் போனதைக்கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு ஒருபடி மேலாக அல்ல, மிக மோசமாகக் கும்பெனியாருடன் கைகோர்த்து, மறவர்சீமை மக்களது கிளர்ச்சி மண்ணோடு மண்ணாய் மறைந்து போவதற்கு அவர்கள் துணை நின்றதை அப்பொழுதுகூட அவரால் மறக்க முடியவில்லை! சித்திரங்குடி ச்ோவைக்காரரது சிந்தனையில் மீண்டும் கமுதிக்கோட்டை, வெள்ளக்குளம், கீழ்க்குளம் போர்களின் பிரதிபலிப்பு நிழலாடியது.

சித்திரங்கடி சேர்வைக்காரரது சிந்தனை இவ்விதம் பின்னோக்கிச் சுழன்று கொண்டே இருந்தது.

அவருக்குள் எவ்வளவுதான் ஆறுதலும், தேறுதலும், சமாதானமும் சொல்லிக் கொண்டாலும், கமுதிக் கோட்டைப் போரையும், அதில் ஆர்வத்துடன் பங்குகொண்டு, மறவர் சீமையின் மானத்தைக் காக்கப் போரிட்ட தியாகிகளான அவரது நண்பர்கள் சிங்கன் செட்டியையும், ஏனைய சேர்வைக்காரர்களையும அவரால் எளிதில் மறக்க முடியவில்லை!