பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

- மறவர் சீமை

உள்ளத்தில் குமுறிக் கொந்தளித்துத் தானே அடங்கிவிடும் மன உளைச்சல் அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்தது. ஆறு, ஏழு மாதங்கள் நடமாட முடியாமல் படுக்கையில் படுத்தே கிடந்தார். அது ஒருவகையான ஓய்வு ஏறத்தாழ ஒராண்டு காலம் ஓடி விட்டது. மெதுவாக அவரது உடலில் தெம்பும் சேர்ந்தது. கைகளும், கால்களும் மீண்டும் வலுப்பெற்றன. அவர் நினைத்தவாறு அடுத்த போராட்டத்திற்கு - இறுதிப் போருக்கு - ஆயத்தமாகி விட்டது போன்ற பிரமை! விரைவில் அந்தப் போரைச் சந்திப்போமா?.... பிறந்த மண்ணில் புகுந்துள்ள வெள்ளை வெறி நாய்களை விரட்டியடித்து வாகை சூடிச் சிறைக் கம்பிகளுக்கு அப்பால் உள்ள சேதுபதி மன்னரை அழைத்து வந்து இராமலிங்க விலாசம் சேது பீடத்தில் அமர்த்தும் அரிய காட்சியைப் பார்க்க முடியுமா? அல்லது அவர் இளைஞராக இருக்கும்பொழுது இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்ற கும்பெனியாரும், ஆற்காட்டு நவாப்புமான கூட்டுப் படைகளின் தாக்குதலை எதிர்த்துப் போரிட்டு இராமநாதபுரம் கோட்டை வாசல் போரில் தியாகிகளான மூவாயிரம் வீர மறவர்களில் ஒருவரான தமது தந்தையைப் போலத் தாமும், இராஜ விசுவாசத்துடனும் நாட்டுப் பற்றுடனும் போராடி தியாகியாகி விடுவோமா?...

இதில் எது நடந்தாலும் சரி. ஆனால், உடனே நடக்க வேண்டும். தாமதம் இல்லாமல், இவ்விதம் உந்தி எழுந்த உணர்ச்சிகளின் உத்வேகத்தில் சிறிது நேரம் உறைந்து இருந்தார். இவ்விதம் அந்த இனிய நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சித்திரங்குடி சேர்வைக்காரருக்கு சிவகெங்கையிலிருந்து அவசரச் செய்தியொன்று வந்து சேர்ந்தது. அது என்ன செய்தி?...................