பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

= =மறவர் சீமை

சீமைக்காட்டில் கும்பெனியாரது ஆணைக்கு அடி பணிந்து கட்டபொம்மனை புதுக்கோட்டைத் தொண்டைமான் பிடித்துக்கொடுத்ததும் பாஞ்சைப் பாளையக்காரரைக் கயத்தாற்றில் தூக்கில் போட்டு அவரது சகோதரர்கள் சிவத்தையாவும், ஊமைக்குமாரசாமியையும் பாளையங்கோட்டையில் அடைத்து வைத்தனர்.” அவரது உறவினர் சவுந்திரபாண்டியனையும், தானாதிபதி சுப்பிரமணிய பிள்ளையையும் வெட்டிக் கொன்றனர்.

பதினைந்து மாதங்களாகச் சிறையில் இருந்த இந்த சகோதரர்கள் சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்று வந்தனர். அதற்கான நேரமும், நாளும் வந்தது. அங்கிருந்த கும்பெனிப் படைகள் சங்கர நயினார்கோவில் சென்றிருந்தது. புத்தாண்டு நாளையொட்டி படைத்தலைவர் மக்காலே மாளிகையில் 2.2.1801ம் தேதி விருந்தும், உல்லாசமும் தொடர்ந்தது. கும்பெனியாரின் அலுவலர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தளபதியின் மாளிகை விருந்துக்குச் சென்றிருந்தனர். பாளையங்கோட்டை சிறைப் பகுதியிலும கண்காணிப்பில் ஓரளவு தளர்ச்சிஇருந்தது. இத்தகைய சாதகமான சூழ்நிலையை முன்னரே தெரிந்து வைத்திருந்த பாஞ்சாலக்குறிச்சியார் சாமியாடிகளைப் போலக் காவடிகளைச் சுமந்தும், விறகு வெட்டிகளைப்போல விறகுகட்டுகளுக்கிடையில் ஆயுதங்களை மறைத்துக் கொண்டும் சிறைப்பகுதிக்கு வந்தனர்.

காவடிக் குழுவினரை வணங்கி, திருநீறு பெறுவதற்காக சிறையைவிட்டு வெளியே அனுமதிக்கப்பட்ட சிவத்தையாவும், ஊமைக் குமாரசாமியும் சிறைக் காவலர்களைத் தாக்கிக் காயங்கள் ஏற்படுத்திவிட்டு மாறுவேடத்தில் வந்திருந்த குழுவினருடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்."

அவர்களைச் சேர்ந்து இருந்த மக்களிடம் புத்துணர்வு, புது தெம்பு. ஆங்கிலப் பரங்கிகளை அழிக்கப் புதிய ஆவேசம். நாடார், மறவர், தொட்டியர், பட்டங்கட்டி, பரவர், முஸ்லிம் அனைத்துச் சமுதாய

37. Dr.K.. Rajaiyan - History of Madurai 1972. 38. Welsh col Mlitary Reminiscenes - Vol 11-1868,