பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - - 55

மக்களும் நாட்டுப் பற்றுடன் ஒரே அணியாக இணைந்து நின்றனா. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் திரும்பி விரும்போழுது, எதிர்க்கரையான இலங்கையிலிருநது வெடி மருநதுகளையும

துப்பாக்கிகளையும் வாங்கிக் கொண்டு வந்தனர். கிள்ர்ச்சிக்காரர்கள் பாஞ்சாலக்குறிச்சியில் இருந்து ஆழ்வார்திரு நகரிவாையர்ன்பகுதியில் பரங்கிகளது கச்சேரிகளை அழித்தனர். அங்கே மறியலில் வைக்கப்பட்டிருந்த மக்கள் தலைவர்கள் அனைவரையும் மீட்டனர். நிர்வாகம் எதுவும் செய்ய முடியாமல் தத்தளித்தது. வடக்கே இராமநாதபுரம் சீமையிலும், தங்கள் கைவரிசையைக் கர்ட்ட ஆயத்தமாயினர்.

பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையும், ஆறு நாட்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மறுவடிவாக மீண்டும் வெள்ளையரை எதிர்பார்த்து எழுந்து நின்றது. சிவத்தையா - ஊமைத்துரை ஆகியவர்களைப் பிடிக்க பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களில் இருந்து பாஞ்சைப் புறப்பட்டுச் சென்ற கும்பெனிப் படையணியினரின் ஒரு தளபதியான வெல்ஷ~ வரைந்துள்ள குறிப்புகள் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. "8.2.1801ம் தேதி தளபதி வெல்ஷ.. அன்று ஒட்டப்பிடாரத்தில் இருந்தபொழுது இந்தக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார்.

"வலுவுள்ளதும், அரண் வாய்ப்புள்ளதுமான அந்தக் கோட்டையைப் பட்டப்பகல் வெளிச்சத்தில் பிடிக்கச் செல்வது வீணான பைத்தியக்காரத்தனமானது என்பதைத் தெரிந்து கொண்டேன். கும்பெனி அணிகள் அங்கு சிறிது இளைப்பாறி சிற்றுண்டிகளை முடித்துவிட்டு இரண்டு வியூகங்களாகப் பிரித்து, பொழுது சாய்ந்த முன்னிருட்டு வேளையில் எதிரிகள் கண்ணுக்குத் தென்படாமல் மறைந்து இருந்து கோட்டையைத் தாக்குவதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஞ்சைக் கோட்டைக்குச் சென்று திரும்பியிருந்த ஒற்றர்கள் அளித்த செய்தி எதிர்பாராததாக இருந்தது. கோட்டையில் ஐயாயிரம் பேருக்குக் குறைவு இல்லாமல் வீரர்கள்

39. குருகுகதாசப்பிள்ளை -திருநெல்வேலிச்சீமைச்சரித்திரம் 1931 பக் 263, 40. welsh - col - miltary - Reminiscences - vol 11-1868.