பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 Ο மறவர் சீமை

பட்டாளத்தின் பதினெட்டாவது பிரிவு அணி பாளையங்கோட்டையிலிருந்து கமுதி வந்து சேர்ந்தது. அத்துடன் மயிலப்பனைத் தேடிப்பிடிக்கும் பணி கயத்தாறில் இருந்து வந்த தளபதி மில்லரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அதேசமயம் கமுதி பாதுகாப்பு நிலைகளைத் தெளிவாக அறிந்து வருவதற்காக எட்டையபுரத்தைச் சேர்ந்த இரு உளவாளிகள் மாறுடையில் சென்று வருமாறு சித்திரங்குடி சேர்வைக்காரர் அனுப்பி வைத்தார். அவர்கள் அளித்த செய்திகளின் அடிப்படையில் அவரது அணி கமுதிக் கோட்டையைத் தாக்கப் புறப்பட்டது. இந்த அணியினர் சென்ற வழியில் உள்ள பரளாச்சி', பெருநாழி, குண்டுகுளம், கரிசல்குளம் ஆகிய ஊர்களில் உள்ள குடிமக்களும் அவர்களிடமிருந்த வளரி, வாள், ஈட்டி ஆகிய ஆயுதங்களுடன் அந்த அணியில் சேர்ந்து போர் முழக்கம் செய்து

கொண்டே சென்றனர்.

இந்த செய்தியை அறிந்த பள்ளிமடம் கிராமக் குடிமக்கள், கிளர்ச்சிக்காரர்களது அடுத்த இலக்கு அவர்களது ஊராகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களது பொன், வெள்ளி அணிமணிகளைத் திருச்சழியல் ஆலயத்தில் பாதுகாப்பிற்காக ஒப்படைத்துவிட்டுப் பக்கத்து கிராமங்களில் உள்ள அவர்களது உறவினர் வீடுகளில் தங்கி இருந்தனர்"

அன்றைய நிலையில் மயிலப்பன் சேர்வைக்காரரது தலைமையிலான கிளர்ச்சிக்காரர்கள் சாதாரண மக்களை எவ்வித சிரமத்திற்கும் உட்படுத்தவில்லை. கும்பெனியாரது சொத்துக்கள், கும்பெனியாரது தானியப் பொதிகள் இவைகளைப் பாதுகாக்கும் கூலிகள், கும்பெனியாருக்கு விசுவாசமாகச் செயல்பட்ட பதர்கள், வியாபாரிகள் ஆகியோரைத்தான் நெருக்கினர். துன்புறுத்தினர். ஆனால், இந்த பாகுபாடுகளைப் பகுத்தறிய முடியாத பாமரமக்கள் வீணாகப் பயந்து வாழ்ந்தனர்.

அவர்களது போக்கினை மேலும், பயமுறுத்தும் வகையில்

47. Madurai District Record vol No 1131/03.03.1801 - 1806/19.03.1801 48. Madurai District Record vol No 1182/08.03.1801 pp 84–86.