பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறவர் சீமை

மில்லர் அவர்களைத் தொடர்ந்து ஓடினான். இரு அணிகளும் பரமக்குடி அருகே மோதின. சிவகெங்கையில் இருந்து உதவி அணி ஒன்று வந்து, மயிலப்பன் சேர்வைக்காரருடன் சேர்ந்து கொண்டது. கும்பெனி படை நாசமாக்கப்பட்டது. மில்லர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இராமநாபுரம் கோட்டைக்கு ஓடினான்.

இவ்விதம் உயிருக்குப் பயந்து ஓடிய கோழை மில்லர். அபாயகரமான அந்த நிலையிலும் தனது பரிசுப் பொருள் போல பிடித்துவந்த சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது மனைவியையும், சகோதரியையும் இராமநாதபுரம் கோட்டைக்கு கைதியாகக் கொண்டு சென்றான், என்ற செய்தி" மிகவும் தாமதமாக மயிலப்பன் சேர்வைக்காரருக்குக் கிடைத்தது. அவரது உள்ளக் குமுறலையையும் கோப உணர்வுகளையும் போல கும்பெனியாரது காட்டுப்பரமக்குடி, தெளிச்சாத்த நல்லூர் கிராமங்களில் அவர் தீயிட்டு எரித்த சேகரம் பட்டறையில் இருந்து எழுந்த தீயின்

நாக்குகளும், புகை மண்டலமும் காணப்பட்டன."

அவைகளைக் கவனித்த மயிலப்பன் சேர்வைக்காரர் நடப்பது நடக்கட்டும் என்ற அமைதிச் சித்தாந்தத்துடன் தமது குதிரையைத் தட்டிக் கொடுத்தார். ஆவேசமாக வைகையாற்றின் வடகரைக்குப் பாய்ந்து சென்றது. அவரது அணியினரும் அவரைத் தொடர்ந்தனர்.

49. T.Rajaram Rao - Manual of Rammad Samasthanams. 50. ஆவணம் இதழ் - சூலை 1997.