பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T B மறவர் சீமை

குறிப்பாக ராஜசிங்கமங்கலம், அறுநூத்திமங்கலம், அஞ்சுகோட்டை, அனுமந்தக்குடி, ஓரூர் குத்தகை நாடுகளில் உள்ள மக்களைத் திரட்டி ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியைப் பலப்படுத்துவது மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரது பிரதான கடமையாக இருந்தது. காரணம் முதுகளத்துளர் பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெள்ளையரது நிர்வாகத்திற்கு எதிராகப் போர்க்கொடி எழுப்பி போராடிக்கொண்டு வந்தபொழுதும், இந்தப்பகுதி மக்கள் விடுதலை இயக்கத்தில் ஒரு சிறிதும் அக்கறையில்லாது இருந்து வந்தனர். இந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கும்பெனியாருக்கு எதிராக வீறுகொண்டு இயங்கச் செய்தார். முழுவெற்றியும் பெற்றார் முத்துக்கருப்பத்தேவர்.

அவரது முயற்சியில் மூன்று நன்முத்துக்களாக ராஜசிங்கமங்கலம் பகுதியில் நாட்டுப்பற்றும், பிறந்த பூமியின் மீது மாளாது பிரியம் கொண்ட மூவர் கிடைத்தனர். அவர்கள் - ஜகந்தாத ஐயன், குமாரத்தேவர். திருக்கண்ணத்தேவன் என்ற மூன்று இளைஞர்கள். மிகுந்த துணிச்சலுடன் வெள்ளையருக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் தொகுத்து பலவகைகளிலும் கும்பெனியாரது நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவந்தனர். அறிவு துலக்கும் ஆகமங்களையம், நீதி நூல்களையும் படித்து மக்களுக்கு நேர்வழி காட்டும் அந்தணர் குடும்பத்தில் பிறந்த பெருமையுடன் அப்பொழுதைய விடுதலை இயக்கத்தில் மக்களுக்கு நல்வழிகாட்டும் கிளர்ச்சிக்குத் தயக்கமின்றி மக்கள் முனைந்து ஈடுபடப் பாடுபட்டவர் ஜகந்நாதஐயன். தமது திருக்கோஷ்டியூர் நம்பி ஆன்ம விடுதலைக்கு மட்டும் இரகசியமாக உபதேசித்த திருமந்திரத்தை அந்த ஊர் திருவிழாவில் திரண்டு இருந்த மக்களுக்கெல்லாம் திருக்கோயில் திருமதிலில் அமர்ந்து உபதேசித்த உத்தமர் இராமானுஜர், அதனை அறிந்து அவரது ஆசாரிய சுவாமிகள், குரு உபதேசத்தை உதாசீனம் செய்த உனக்கு நரகம்தான் கிடைக்கும் என்று சபித்தபோது நூற்றுக்கணக்கானவர்கள் சொர்க்கம் சேரும்