பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=மறவர் சீமை

கொடுமைகளை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போரிட்ட மறவர்களை, ஆங்காங்கு இருந்த கோழைகளால் கைக்கூலிபெறும் சுயநலமிகள் காட்டிக்கொடுத்துக் களிப்பு எய்தினர். கும்பெனியார்களிடம் சில பொற்காசுகளையும் பெற்றனர். கொடுமைகளினால் குமைந்து இரத்தம் கொட்டிய நிலையிலும், ஏசுபிரான் இறைவனிடம் வேண்டியது போல "இந்த மனிதர்கள் தாங்கள் எத்தகைய தவற்றை, பாவத்தை செய்கிறோம் என்பதை உணராமல் செய்கிறார்கள்....." என்று சொன்னது போல் இந்தக் கழிசடைகளும், தான் முளைத்து வளர்ந்த ரோஜா செடி, அந்த மண்ணின் மனத்தை, திக்கெல்லாம் வீசுவதை, அந்தச் செடிக்கு அருகில் முளைத்த முட்செடி அந்த ரோஜா செடியை அழித்து வளர்வது போல, மானமும், வீரமும் மணக்கும் சேது நாட்டின் புகழைச் சமுதாய உணர்வுடன், கொடுமைகளைக்கண்டு குமுறி எழுந்த புலிக்குட்டிகள் வேங்கையாக வளர்ந்து பாய்வதற்குள் கொன்றுவிட்டனர். தாங்கள் எத்தகைய சமுதாயக் கொடுமையைச் செய்கின்றோம் என்பதை உணராமல், இராமநாதபுரம் சீமை போன்ற இறுகலான, மிகவும் நெருக்கடியான சூழ்நிலை சிவகெங்கையிலும், முதுகளத்தூரிலும் எழுந்தன. வெள்ளம் வருவதற்கு முன்னர், தண்ணி வரக்கூடிய வரத்துக்கால்களைச் செம்மை செய்வது போல சேதுபதி சீமைக்குத் தெற்கில் பாஞ்சாலக்குறிச்சியிலிருந்து அபாயம் வரவிருக்கிறது என்பதை உணர்ந்து மீண்டும் முத்துக்கருப்பத்தேவர் எஞ்சியிருந்த மறவர்களைத் திரட்டிக்கொண்டு, சேதுநாட்டில் புறவாயிலாகத் திகழ்ந்த கமுதிக் கோட்டைக்க விாைங்கார். *