பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாரதிதாசன் பாரதிதாசன் கவிதை தோன்றுவதற்கு முன்பும் 3ன்பும் கவிதை-தமிழ்க்கவிதையின் போக்கு எப்படி இருந்தது? தமிழ்க் கவிஞர்கள் எவற்றைப் பற்றிப் பாடினர் கவிஞர்களுக்கும் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு எத்தகையது? என்பன போன்றவற்றைப் பற்றி நாம் ஒரளவுக்குச் சிந்தித்தாலே போதும் : பாரதிதாசன் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கொண்டுள்ள சீர்த்த இடம், பெருமை, சிறப்பு எல்லாம் தெற்றென. விளங்கும். o பாரதிதாசனுக்கு முன்னர் பழுத்த புலவர்கள். இலக்கண, இலக்கியங்களிலே கைதேர்ந்த கவிஞர்கள். கவியரசர்கள், இம் என்னும் முன்னே ஏராளமான கவிதைகளைப் பொழிந்து தள்ளிய காளமேகங்கள். கோமூத்திரி, நாகபந்தம் போன்ற சித்திர கவிகளையெலாம். மிக எளிதாகப் பாடிய சித்திரகவி வித்தகர்கள். புராணங் களை நூற் றுக்கணக்கிலே பாடிக் குவித்த பாவாணர்கள். பிரபந்தப் புலவரேறுகள் ஆகியோரெல்லாம் இருந்துள் ளனர். அவர்களுக்கெல்லாம் இல்லாத பெருமையும் இடமும் அவர்களுக்குப் பின்வந்த பாரதிதாசனுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது பார்ப்போம். இக்கட்டுரை இந்தி தந்தி இது சங்கி இறப்பு) FT = வளிவந்த இ. (1959)