பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 S டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கனைகள் என்றெல்லாம் கேட்பவர்கள் காது அடைக்க, காது புளிக்கப் பேசிவிட்டு, காரியத்தில் கம்மென்று இருந் தால் எப்படி?


குழந்கைகளை வற்புறுத்தி வேலை வாங்கினால் தான் முடியும் என்ற சித்தாந்தத்தில், படிப்புக்கு என்னென்ன யுக்திகளை படித்தவர்கள் மேற்கொள்கின்றீர்கள்.


ஒவ்வொரு குழந்தையும் உன்னத தேக வலிமையுள்ள வர்களாக விளங்க வேண்டும் என்று நீங்கள் எடுத்துக் கொண் டிருக்கின்ற முயற்சிகள் தாம் என்ன?


காற்றிலே கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு, சிலம்பச் சண்டை போடுகிறேன் என்று யாராவது சொன்னால், நீங்கள் நம்புவீர்களா என்ன?


கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று கூறிக்கொண்டே ஏமாற்றும் முச்சந்தி பாம்பாட்டியைப் போலத்தான்.உங்கள் காரியங்கள் இருக்கின்றன. கீரியையும் பாம்பையும் காட்டிக் கொண்டே, சொல்வதை செய்யாமல் காசு சம்பாதித்துக் கொண்டு அவன் போக, ஏமாந்து காசு கொடுக்கிற பொது மக்கள், பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருப்பது போல, விளையாட்டுத் துறையிலும், மேலிடத்திலும் கீழிடத் திலும் ஆட்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குழந்தை சக்தியின் பெருமை புரியும். திறமை தெரியும். எதிர்காலமும் ஒளிரும்.