பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நீங்கள் நல்ல பயிற்சியாளராக


விரும்பினால்?


ஆசிரியர் யார், பயிற்சியாளர் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


எல்லா விளையாட்டுக்களிலும் மற்ற உடற்பயிற்சி முறைகளிலும் ஈடுபட்டு, அவற்றின் அடிப்படைத் தன்மை களைத் தெரிந்து கொண்டு, விதி முறைகளையும் விளக்கங் களையும் புரிந்து கொண்டு, கற்பிக்கும் திறமை பெற்றவர் களை, ஒராண்டு படித்துப் பட்டம் பெற்றவர்களைத் தான் ஆசிரியர்கள் அதாவது உடற்கல்வி ஆசிரியர்கள் என்கிறோம்.


ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட்டு, முழுமையாகக் கற்றுக் கொண்டு, அதில் முழுக்க முழுக்க ஒன்றித்துக் கற்பிக்கும் திறமை பெற்ற, பட்டம் பெற்ற ஒருவரை பயிற்சி யாளர் என்கிறோம்.


இனி ஒரு சிறந்த பயிற்சியாளருக்குரிய சீரிய குணநலன் களை வரிசைப் படுத்தி விளக்குகிறேன்.