பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அப்பொழுது, நீங்கள் பொறுமையை இழந்து விடக் கூடாது. பொறுமையான பயிற்சி. நிச்சயம் பலிக்கும். காரிய சித்தியை அளிக்கும். ஆகவே, உங்களை நாடி வந்திருக் கின்றவர்களின் நன்மைக்காக, உணர்ச்சி வசப்படாமல், கோபப்படாமல், பொறுமைகாப்பது பயனளிக்கும் என்பதில்


நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும்.


எப்பொழுதும் சுயக்கட்டுப் பாட்டை இழக்காமல்


இருப்பது நல்லது.


8. நல்ல பயிற்சியாளர் என்பவர், பயிற்சிக்குப் போகும் முன்னர், தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுத் தயார் செய்து கொண்டு தான் செல்ல வேண்டும்.


தயார் செய்து கொண்டு போவதில் தவறுகின்றவர்கள், தவறுதலுக்கு ஆளாகின்ற தவறினைச் செய்து விடுகின்றார் கள். ஆமாம், அவர்கள் அடுத்தவர்கள் கேட்கும் வினாக் களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திகைப்பதுடன், என்ன செய்வது அடுத்து என்ற திகைப்புக்கு ஆளாகித் தடுமாற்ற


மடைகின்றார்கள்.


தடுமாற்றம் திகைப்பு எல்லாம், அவமானத்துக்கல்லவா


ஆளாக்கிவிடும்!


ஆகவே, பயிற்சியாளர்கள் பாடத்திட்டத்தை வரிசைப் படுத்தி, ஒழுங்கு படுத்திக் கொண்டு, வரைமுறையுடன் திட்டவட்டமான செயல் முறைகளுடன் அணுகிடும் போது தான், ஆக்கபூர்வமான விளைவுகள் நேர்கின்றன. ஆமாம். எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது இனிமையான அனுபவம் தானே!


9. பயிற்சி பெறுபவர்களிடம் நீங்கள் கண்ணியத் தையும் கட்டுப்பாட்டையும் எதிர்பார்க்கிறீர்கள். அது