பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பயிற்சி முறைகளில் பண்பாடுகள்


பயிற்சியாளர்கள்


ஒரு விளையாட்டில் ஆர்வத்துடன் வந்து ஆடுகின்ற வர்கள் ஒருவகை. தெரிந்தவரையில் விளையாடித்திளைத்து, அதை விட்டு அகன்ற பிறகு, மறந்து போகின்றவர்கள் மற்றொரு வகை.


அறிந்து கொண்ட விளையாட்டில் திறமைகள் தமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதுடன் தேக்கம் கொள்ளாமல், திறமைகளை வளர்த்து விடுகின்ற திறன் நுணுக்கங்களில் தேர்ச்சி கொள்ள விழையும் தேர்ந்த ஆட்டக்காரர்கள் இன்னொரு வகை.


இந்த மூன்றாம் வகை ஆட்டக்காரர்களின் முன்னேற்றத் திற்கும், முழுமையான நல்லாட்டத்திற்கும் முனைப்புடன் உதவுகின்றவர்களைத் தான், சிறப்புப் பயிற்சியாளர்கள் (Coaches) என்று நாம் அழைக்கிறோம்.