பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 12 டாக்டர் எஸ். நவராஜ் செல்லைய:


அத்தகைய வெற்றியை அடைய வேண்டும் என்ப தற்காக நியாயமான வழிகளில், நீதியான முறைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதைப் பயிற்சியாளர்கள் உறுதியாக வலியுறுத்திச் சொல்லித் தர வேண்டும்.


சட்டம், தர்மம் இவற்றிலிருந்து பிறழ்பவர்கள் தரமான விளையாட்டு வீரர்கள் அல்ல என்பதை வற்புறுத்திக் கூறி, இப் பண்பிலிருந்து மீறுபவரை, முடிந்தால், ஆட்டத் திலிருந்தே விலக்கி வைத்திடவும் வேண்டும்.


பண்போடு பெறுவது தான் வெற்றி, மற்றது மட்ட


மான போராட்டத்தின் மாணமற்ற சாரம்.


ஆகவே, கீழ்த் தரமான பண்புள்ளவர்களுக்குக் கற்றுத் தருவதைப் பயிற்சியாளர்கள் தவிர்த்து விட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தவறான அணுகு முறையில் வெற்றி பெறலாம் என்பதாகப் பயிற்சியாளர்கள் கூறுவார்களே யானால், அவர்கள் குடப்பாலில் விழுகின்ற ஒரு துளி விஷம் போன்றவர்கள் ஆவார்கள்.


எனவே, பண்பாடு மிகுந்த வெற்றி தான் பிறர் மத்தியில் புகழையும் பெருமையையும் வாங்கித் தரும் என்பது தான் பயிற்சியாளர்கள் கூறுகின்ற வேதவாக்காக இருக்க வேண்டும். அத்தகைய மனோ நிலையை உயர்த்திட வேண்டும்,


6. செயல்களில் செம்மை


வெற்றிக்கு மட்டும் தான் நேர்வழியில் செல்ல வேண்டுமா என்றால், வெற்றியைப் பெற உதவும் எதிராளி களிடமும், பண்புடன் நடந்து கொள்ள வேண்வதும் முக்கியமான கடமையல்லவா!