பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆகவே, அவர்கள் மற்றவர்களை விட மேம்பட்ட நிலை யில்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் மதித்து மரியாதை செய்யும் மாண்பு நிலையில் தான் நடமாடுகிறார்கள்.


அப்படிப் பட்டவர்கள், பிறர் போற்றுகின்ற பண்பாட்டு முறைகளிலிருந்து பிறழாமல், வழுவாமல் நடந்து கொள்ளு மாறு பழக்குவது, பயிற்சியாளர்களுக்கு ஒரு பணிதான்.


ஆகவே, பயிற்சி முறைகளில் பண்பாடுகளை வளர்க்கும்


பணியை பயிற்சியாளர்கள் மேற்கொண்டால், பங்கு பெறு.


) பவர்கள் பயனடைகின்றார்கள்.


விளையாட்டுத் துறையும் பெருமை பெறுகிறது. மற்றவர்கள் விருப்பத்துடன் வந்து கலந்து கொள்ளவும், முடியாதவர்கள் வந்து வேடிக்கை பார்த்து மகிழவும் வாய்ப்புக்கள் நிறைகின்றன.


எனவே, பண்பாடுகள் நிறைந்த பயிற்சி முறைகளை மேற்கொள்வது, நாம் பாடுபடும் துறையை மேலும் பிரகாச மான எதிர் காலத்திற்கு இட்டுச் செல்கின்ற பெருந் தொண்டு என்று சென்று, உழைத்துப் பயன் பெறுவோமாக!