பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i R & டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இருப்பாக இருக்கலாம். குப்புறப் படுத்துக் கொண்டு. அல்லது மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கும் தன்மையிலும் இருக்கலாம்.


அதாவது, அமைதியான மனதுடன், அலை பாயாத உடல் உறுப்புக்கள், ஆர அமர இருந்து, உறுப்புக்களை இதமாக, முறையாக இயக்குகின்ற தன்மைக்கே ஆசனம் என்று பெயர்.


இதிலென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? விபத்து நேர்ந்து விடப் போகிறது?


ஆசனம் செய்து கொண்டே வந்தால், சன்னியாசிகள் புத்தி வந்துவிடும். சாமியார் ஆகிவிட வேண்டியது தான் இப்படியொரு வதந்தி.


ஆசனங்கள் செய்தால், பிற்காலத்தில் பலமாதிரியாடி சங்கடங்கள் தோன்றிவிடும். வயிறு பெருத்துவிடும். உடலில் பலவாறான நோய்கள் வரும் என்றெல்லாம் கற்பனைகளை


கட்டவிழ்த்து விடுகிறார்கள் பலர்.


இதைக் கேட்பவர்களும் அப்படியே நம்பி விடுகிறார்கள்.


பேச்சுவாக்கில் அவிழ்த்து விடுகிற ‘பொய்ப் புரளி களை நிஜமென்று நம்பி, நெஞ்சம் தளர்ந்து, பலரும் நிலை மாறிப் போகின்றார்கள்.


ஆசனங்கள் செய்து கொண்டே இருந்து விட்டு, உடனே விட்டு விட்டால் உடல் பாதிக்கப்படும். மனம் பாதிக்கப்


படும். பிறகு மன ஒருமைப்பாடு வராது என்றும் கூறு கிறார்கள்.


இதற்கெல்லாம் தனித்தனியாக விளக்கம் தர முடியாத தால், பொதுவாக ஒரு கட்டுரையாகப் பிறப்பித்துத் தந்திருக்கிறோம்.