பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 . டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வழியாக இரத்தம் எளிதாக மேலேறிச் செல்ல வழி கிடைக் கிறது. வாய்ப்பும் கிடைக்கிறது.


ஆகவே, தூய்மையிழந்த இரத்தம் தூய்மை பெற்றிட துரிதமாக்கி ஆசனங்கள் உதவுகின்றனவே!


5. ஆசனங்கள் செய்யும் பொழுது பிராணாயாமத்தை


மிகுதியாகக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. அதிகமான உயிர்க்காற்றை உள்ளுக்கிழுக்க, அதனால் இரத்த ஒட்டம் அதிகமாக வேகம் பெற, இப்படியாக உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு இரத்த ஓட்டம் எளிதில் போய் பாய். கிறது. இரத்த ஒட்ட மண்டலம் வலிமை பெறுவதால், உடலெங்கும் இரத்த ஒட்டம் பாய, உடல் தூய்மையும் தெளிவும் பெற்றுக் கொள்கிறது.


6. அதிகமாக உயிர்க் காற்றை இழுக்க, அடைக்க, வெளியிட என்பதாக செயல்படுவதால், சுவாசமண்டலம் மிகுந்த வலிமை பெறுகிறது. நுரையீரல் வலிமை பெறுவ, தால், மற்ற உறுப்புக்கள் யாவும் செழிப்படைகின்றன.


7. சுவாசமண்டலம் என்றதும் மூக்குக் குழலில் தொடங்கி, மூக்குப்பாதை வழியாகக் காற்று தங்குதடை யில்லாமல் போய் வருவதால், நுரையீரலுக்கும் மிகுதியாகக் காற்று கிடைக்கிறது. இதனால் நுரையீரலில் உள்ள சிறு சிறு காற்றுட் பைகள் எல்லாம், உயிர்ச் சாற்றைப்பெறத் தொடங்குகிறது, உற்சாகத்துடன் பணியாற்ற ஆரம்பிக் கிறது.


8. ஆசனங்கள் எல்லா நாளமில்லா சுரப்பிகளையும் சுகப்படுத்தி, அதிகமாக அமிலங்களை உற்பத்தி செய்ய வைக்கின்றன. தைராய்டு, பிட்யூட்டரி, பீனியல், அட் ரீனல் போன்ற சுரப்பிகள் மிகச் சிறப்பாக சுரந்து, இரத்தத் துடன் கலந்திட வைத்து, உறுப்புக்களை உறுதியாக்கு. கின்றன.