பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


(Strokes), போன்ற நோய்களைக் குணப்படுத்தும் நூதன ஆற்றலை உடல் பெறுகிறது.


3. நீச்சல் பயிற்சிகள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிப்பன வாகும். வயது வித்தியசமில்லை. ஆண் பெண் பாகு பாடில்லை. அனைத்துத்தரத்தினரும் பங்குபெறும்போது ஆனந்தமடையும் அளவில் தான் நீச்சல் பயிற்சிகள் இருக் கின்றன.


நீச்சல் பயிற்சிகள் உடல் நலத்தை மட்டுமல்ல, உறுதியான உடலமைப்பையும் வடித்துத் தருகின்றன; தண்ணிரில் நீந்துபவர்கள் மட்டுமல்ல, நிற்பவர்கள் கூட நிறைய பலன்களைப் பெறுகின்றார்கள் என்று மருத்து வர்கள் கூறுகின்றார்கள்.


இதய நோய்கள் உள்ளவர்கள், ஆஸ்த்மாக்காரர்கள், போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எல்லாம் நீச்சல் பயிற்சிகளால் குணமாகின்றனர்.


மூட்டுவாத நோய்கள் யாவும், ஆழமான நீர்ப்பரப்பிற் குள்ளே பயிற்சிகள் செய்யும்போது குணமாகின்றன என்று மருத்துவர்கள் உறுதியாக நம்புவதுடன், உத்தரவாதத் துடன் பயிற்சியும் தருகின்றார்கள், குணம் பெறவும் செய்கிறார்கள் .


மேல் நாட்டில் ஒரு தம்பதியர் இருவரும் 10 வாரங்கள் இடைவிடாது நீச்சல் பயிற்சிகள் செய்தபோது, தங்களுக் கிருந்த நாடித்துடிப்பு வேகம் அடங்கி, இரத்த அழுத்தம் குறைந்து, இயல்பான நிலைக்கு இறங்கியதுடன், உடலி லிருந்த கொலஸ்ட்ரால் கொழுப்புச் சத்தும் குறைந்து, தசைகளில் அழகான அமைப்பும், உடல் திறமும் பெற்றனர் என்று அறிவிக்கின்றனர். அப்படிப்பட்ட பயிற்சி முறைகள் சிலவற்றை தொடர்ந்து காண்போம். o