பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

11

.


அப்படிப் பட்ட சில சான்றுகளை இங்கே நாம் காண் போம்.


1968ம் ஆண்டு மெக்சிகோ நகரத்தில், ஒலிம்பிக் பந்த யங்கள் நடைபெற்றன. மெக்சிகோ நகரமோ கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்ப தாகும்.


உலகில் இருந்த உயிரியல் அறிஞர்கள், உளவியல் வல்லு நர்கள், ஆராய்ச்சி விற்பன்னர்கள், மருத்துவ மேதைகள் எல்லோரும் பயந்து போய், பதறியடித்துக் கொண்டு, ஒரு கருத்தினைத் தெரிவித்தார்கள், அவர்கள் கவலைப்பட்ட விஷயமானது பிராணவாயுவைப் பற்றித்தான்.


உயரமான இடத்தில் பிராண வாயுவின் அளவு குறை வாகத்தானே கிடைக்கும். பங்கு பெறுகின்ற போட்டி யாளர்கள் அனைவரும் பிராணவாயு பற்றாக் குறையினால், பெரிதும் சிக்கித் திணறிப் போகப் போகிறார்கள். அத னால் போட்டி நிகழ்ச்சிகளில், சாதாரண சாதனை கூட நிகழாமல் போகப் போகிறது என்பது தான் அவர்கள் ஊதிய அபாயச் சங்கு!


ஆனால் என்ன ஆச்சரியம்! அவர்கள் அபாய அறிவிப்பு அணுவளவு கூட, உண்மை இல்லாமல் போய் விட்டது.


சோதனைகளும் சாதனைகளும்


ஒலிம்பிக் போட்டிகளில் பெரும் வல்லமையுடன் வீரர் களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். பல ஒட்ட நிகழ்ச்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று. பாப்பீமன் என்ற அமெரிக்க வீரர் 8.90 மீட்டர் தூரம், நீளம் தாண்டலில் புதிய சாதனையைப் படைச் H