பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கடைசி நேரத்தில் புறப்பட்டுப் போகின்றார்கள் என்றும் எழுதுகின்றார்கள்.


அதாவது இந்தியாவிலிருந்து உரிய நிர்வாகிகளிடம் இருந்து, உரிய நேரத்தில் அனுமதி அளிக்கப் படாததே காரணம். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அணி களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும், அவர்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பையும், புறப்படுகின்ற குறிப்பையும் கொடுத்தால்தானே, ஒரு அணி போய் ஒழுங்காக விளை பாட முடியும்?


கடைசி நேர அனுமதி, போட்டிகளில் பங்கு பெறத் தான் செய்யும். கடுமையாகப் போராடும் திறமைகளை இழக்கவே. செய்து விடுகிறது.


2. வெளிநாடு செல்லும் அணிக்குப் போதுமான அளவு: பணவசதிகள் கொடுத்து அனுப்பப்படுவதில்லை. ஒரு குழுவில் 16 பேர்களுக்கு மட்டுமே அந்நிய செலாவணி அனுமதிக்கப்படுகிறது. அந்தப் பணத்திற்கு உணவு பெறு வது பாதிதான் சாத்தியமே தவிர, மேலும் தேவையான சித்துள்ளப் பொருட்களை வாங்குகின்ற சக்தியும் இல்லா மற் போகவே, அணியுடன் கூட செல்கின்ற மேனேஜர், பயிற்சியாளர்களுக்கு உணவு நிலையை சரிகட்டும் முயற்சி களிலேயே பாதி நேரம் போய்விடுகிறது. உணவு விகிதம் குறைந்தால், உடலில் வீரம் எப்படி வெளிப்படும்? பண வசதி பற்றாக்குறையும் அணிகளின் ஆற்றலின்மைக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.


3. இப்பொழுதெல்லாம் வி ைள யா ட் டு க் க ளி ல் ‘விளையாட்டு மருத்துவம் ஒரு முக்கிய இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. அந்த வசதிகள் இல்லா விட்டாலும், பயிற்சி முகாம்களின் போது, குறைந்தபட்சம் ஒரு டாக்டராவது இருக்க வேண்டுமல்லவா! வீராங்சனை