பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பிராணவாயு போதிய அளவு இல்லாத இடத்தில், இத்த கைய பெரும் சக்தி அந்த வீரர்களுக்கும் வீராங்கனை களுக்கும் எப்படி வந்தது? அதுதான் மனித தேகத்தில் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியாகும்.


கரடி விட்ட கரடி


இன்னுமொரு உதாரணத்தை இங்கே படியுங்கள் ஆர்க்டிக் பகுதியில் விமானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு விமானி, விமானக் கோளாறின் காரணமாக, கீழே இறங்க நேர்ந்தது. பிறகு, அவர் விமானத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென்று கரடி ஒன்று வந்து, அவரது கழுத்துப் பகுதியில் தனது காலினை ஊன்றியது.


ஆபத்தை உணர்ந்து கொண்ட அந்த விமானி, உடனே தாவிக் குதித்து, விமானத்தின் இறக்கையின் மேல் ஏறிக் கொண்டு தப்பித்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், அவர் உடனே உயர மாகத் தாவியது 2 மீட்டர் உயரம். அவர் அணிந்திருந்த உடைகளோ, கடும் குளிரைத் தாங்கக் கூடிய கனமான உடைகள். இருந்தும் எப்படி அவரால் துள்ள முடிந்தது?


இந்த சக்தி எப்படி வந்தது?


அமெரிக்காவில் சான்டியாகோ என்ற ஓர் இடம். அங்கே உள்ள ஒரு குழந்தைகள் பள்ளி, பெற்றோர்கள் அந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விட்டுச் செல்கின்றனர்.


ஒரு தாய் தன் குழந்தையை பள்ளியின் வாசலில்


விட்டுவிட வருகிறாள். அப்பொழுது ஒரு கார் படுவேகத்தில் வருகிறது. பிரேக் போட்டும் கார் நிற்கவில்லை.