பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 141


எப்பொழுது இந்த நிலை மாறும்!


பள்ளிக் கூடத்தில் உடற் கல்வியைக் கட்டாயமாக்கி, ஆ,ாபாட்டுக்களில் மாணவ மாணவிகளை ஆர்வமுடன் பங்கு பெற வைத்து, கல்லூரி மாணவர்களைக் கட்டாயமாக விளையாட்டில் ஈடுபடச் செய்து, அதற்கான ஆக்கபூர்வ மான திட்டங்களைத் தீட்டி, அதிகாரபூர்வமாக சட்டம் என்றைக்கு வருகிறதோ, அன்றுதான் இந்தியாவின் பெருமை வெளிவரும். தோல்வியைத் துரத்தாத தன்மை தோன்றும். வெற்றிகள் பெருகும்.


ஆனால் பூனைக்கு மணியை யார் கட்டுவது என்பது போல, இதனைச் செய்யும் நாட்கள் என்று வருமோ! யாரால் ஏற்படுமோ? இன்றைய நிலையையும் பார்ப்போம்.


இந்தியாவில் உடற்கல்வியின் நிலை


உடற்கல்வியை உலகம் மதித்து ஏற்றுக் கொண்டிருக் கிறது. போற்றிக் கொண்டாடி மகிழ்கிறது. மக்களிடையே உடற் கல்வியை இணைத்து மாணவர்களிடையே உடற் கல்வியைப் பாடமாக்கிப் புகுத்தி, மகோன்னதமான மறுமலர்ச்சி மிகுந்த நாகரிக வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறது.


நமது நாட்டின் நிலை என்ன? உடற்கல்வி என்றவுடன் “ ைவிலை என்று கேட்கிறது! நமது சமுதாயம்.


நமது நாட்டில் உடற்கல்வி எந்த நிலையில் இருக்கிறது. “பதைப் பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறோம்.


‘ உடற்கல்வியானது பாடத்திட்டங்களில் (துணை கடிகர் போல) கல்விக்கு மாற்றாக உதவுகிற ஒரு கல்விப்