பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பாடமாக அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, முதல் பாடமாக இருக்கவில்லை.


2. கல்விப் பணிக்காக நிறைய செலவிடப்படுகிற சூழ் நிலையில், உடற்கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை, கணிசமான அளவுக்குக் கூட இல்லாமல் இருக்கிறது.


3. உடற்கல்வியின் உன்னத நோக்கத்தையும், உயர்ந்த இலட்சியத்தையும், மனித மேம்பாட்டுக்கான குறிச் கோளையும், மக்கள், மாணவர்கள் நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் விளக்கப்படவில்லை. விவரிக்கப்படவும் இல்லை.


4. பள்ளிகளில் கல்லூரிகளில், திறமையுள்ள ஒரு சில மாணவ மாணவிகளுக்குத்தான் ஆர்வத்துடன் கற்பித்து, ஆதரவு காட்டுகிற சூழ்நிலை அமைந்திருக்கிறதே தவிர அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய உடற்கல்வி என்ற


நிலைமையில் மேலும் முன்னேற்றம் இடம் பெறவில்லை.


5. உடற்கல்வியின் செயல் முறைகள் எல்லாம் தனிப் பட்டவர்களுக்கு சாதகமான நிலையிலே தான் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. பொதுமக்கள், மற்றும் அனைவருக்கும் என்றவாறு அமையவில்லை.


6. வகுப்புக்கு வகுப்பு திறமை தேர்ச்சிகள் பெருக வேண்டும் என்பது போன்ற அடிப்படைத் திட்டங்களும் செயல் முறைகளும் அமையவில்லை.


7. சிறப்புப் பயிற்சி (Coaching) என்பதில் பழசாகிப் போயுள்ள பழக்கத்தை பின் பற்றுகிறார்கள். விஞ்ஞான் பூர்வமான முதிர்ந்த முன்னேற்ற முறைகளை இன்னும் கண்டறியாத நிலையில் தான், நமது பயிற்சி முறைகள்


இருக்கின்றன.