பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியென்றால், தோல்வி என்பது தேவைப்படாத ஒன்றா? தொடக் கூடாத ஒன்றா?


சற்று சிக்கலான கேள்வி தான்!


ஆழமாக எண்ணி, அற்புதமாகத் திட்டமிட்டு, அருமை யாகச் செயல்பட்டு, அறிவோடு முனைந்து, ஆழ்ந்த உழைப்புடன் பாடுபடும் பாங்கான பழக்க வழக்கங்களே மனித வாழ்க்கையாகும்.


தொடங்கிய திட்டத்தில் நினைத்தற்கு மாறாக நடப்பதையே தோல்வி என்கின்றனர்.


ஆசைகளுக்கும், அகலமாக விரித்திருக்கும் கனவு. களுக்கும், தோன்றுகிற தொடர்பில்லாத அகால முடிவு களையே தோல்வி என்கின்றனர்.


விளையாட்டு என்பது வாழ்க்கையின் மறுபதிப்பு, பிரதிபலிப்பு என்பதாக எல்லோரும் சொல்கின்றனர்கள். நம்புகின்றனர். உண்மைதான்.


விளையாட்டில் விளைகின்ற தோல்விகளையும் வெற்றி களையும் கொஞ்சம் ஆராய்ந்தால், வாழ்க்கையின் வடிவமும் வாய்ப்பும், வளர்ந்து வரும் பிரச்சனைகளும், வாலாட்டி வரும் தோல்விகளும் நமக்கு நன்கு புரிந்து விடும்.